உதவி வேளாண் அலுவலர் பணிக்கு எழுத்து தேர்வு...!

Posted By:

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 333 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை ரகுமத் நகர் மேக்தலின் மெட்ரிக் பள்ளியில் இந்த தேர்வு நடைபெற்றது. இத் தேர்வு மையத்துக்கு 464 பேர் ஒதுக்கீடு பெற்றிருந்தனர்.
அவர்களுக்கு காலையில் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் 2வது தாள் தேர்வும் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற முதல் தாள் தேர்வில் 426 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

உதவி வேளாண் அலுவலர் பணிக்கு எழுத்து தேர்வு...!

38 பேர் தேர்வு எழுத வரவிலை. பிற்பகலில் நடைபெற்ற 2வது தாள் தேர்வில் 425 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். காலையில் தேர்வு எழுதியவர்களில் ஒருவர் பிற்பகல் தேர்வை எழுதவில்லை. இந்த தேர்வை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் தேர்வை கண்காணித்து நடத்தினர்.

English summary
Above article mentioned that Assistant Agricultural Officer exam 2017

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia