மாணவர்களின் கலை, தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்த துபாயில் கண்காட்சி

Posted By:

துபாய்: துபாய் சிலிக்கன் ஓயாசிஸ் பகுதியில் அமைந்துள்ள ஜெம்ஸ் வெல்லிங்டன் பள்ளியில் பள்ளி மாணவர்களின் கலை மற்றும் தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்த உதவும் வகையில் கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் அமீரகம் முழுவதும் பல்வேறு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 1,800 பேர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் 215 திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சி மாணவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்று வருவதாக கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

மாணவர்களின் கலை, தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்த துபாயில் கண்காட்சி

மாணவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் துபாய் அரசின் சார்பில் செயல்பட்டு ஹம்தான் விருது வழங்கும் அமைப்பு, பிரதமர் அலுவலகம் உள்ளிட்டவையும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சியில் பங்கேற்றன. அவை மாணவர்கள் சிறப்பான திறமைகளுடன் இருந்தால் அவர்களுக்கு அரசின் சார்பில் என்னென்ன கௌரவங்கள் கிடைக்கின்றன என்பது குறித்து இந்த கண்காட்சி மூலம் வெளிப்படுத்தப்பட்டது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்த கண்காட்சியில் ஷார்ஜா அவர் ஓன் ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் பயின்று தமிழகத்தின் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் அருள் என்ற மாணவர் தனது கலை மற்றும் தொழில்நுட்ப திறமையினை வெளிப்படுத்தி அதனை இந்த கண்காட்சியில் இடம் பெற செய்திருந்தார். கண்காட்சியின் போதே பொதுமக்கள் முன்னிலையில் அமீரக தலைவர்கள் மற்றும் இந்திய பிரபலங்கள் குறித்து வரைந்து அசத்தி பாராட்டைப் பெற்றார்.

மாணவர்களின் கலை, தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்த துபாயில் கண்காட்சி

மாணவர்கள் சுயமாக சிந்தித்து தொழில்நுட்பங்களை உருவாக்கி கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் பாராட்டுகளையும், கைதட்டல்களையும் பெற்றனர். இதுபோன்ற கண்காட்சி தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையும் அப்போது எழுந்தது.

English summary
Arts and technical fair has held in Dubai silicon Oasis area recently. Gems Wellington school has organised this fair in a grand manner.. More than 1,800 students has participated in this fair.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia