ராணுவத்தில் சேரணுமா... அப்போ...புதுச்சேரிக்கு வாங்க!

Posted By:

சென்னை: ராணுவத்தில் ஆள் சேர்க்கும் பணி செப்டம்பர் 4-ம் தேதி முதல் புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த ராணுவ முகாமில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்காக அனுமதிக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ராணுவ ஆள்சேர்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தில் சேரணுமா... அப்போ...புதுச்சேரிக்கு வாங்க!

இதுதொடர்பாக, ராணுவ ஆள் சேர்ப்பு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாம், செப்டம்பர் 4 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க ஏற்கெனவே இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மின்னஞ்சலில் அனுமதிக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 4-ஆம் தேதியும், சென்னை, கடலூர், திருவள்ளூர் இளைஞர்களுக்கு 5-ஆம் தேதியும், வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகாவைச் சேர்ந்தோருக்கு 6-ஆம் தேதியும், வாலாஜா, அரக்கோணம், ஆற்காடு, வாணியம்பாடியைச் சேர்ந்தோருக்கு 7-ஆம் தேதியும், குடியாத்தம், காட்பாடியைச் சேர்ந்தோருக்கு 8-ஆம் தேதியும் முகாம் நடக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், செங்கம், தண்டராம்பட்டு, திருவண்ணாமலையைச் சேர்ந்தோருக்கு 9-ஆம் தேதியும், ஆரணி, செய்யாறு, வந்தவாசியைச் சேர்ந்தவர்களுக்கு 10-ஆம் தேதியும் முகாம் நடக்கிறது. 11-ஆம் தேதியன்று வேலூர் மாவட்டம் ஆம்பூர், திருப்பத்தூர் விண்ணப்பதாரர்களுக்கும், 12-ஆம் தேதி புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கும் முகாம்கள் நடைபெறும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Army Recruitment camp will be conducted in Puduchery from sep 4 to sep 10. Letter has been sent for the aspirants who applied for the posts in army.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia