பள்ளி இறுதித் தேர்வு பற்றிய பயமா.. இதைப் படிங்க.. கூல் ஆயிருவீங்க!

Posted By:

சென்னை : பள்ளி இறுதித் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவ மாணவியர்கள் ஒரு வித பயத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இறுதித் தேர்வு மிகவும் நெருங்கிய நிலையில் இருக்கும் இந்தத நேரத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களையும் அறியாமல் ஒரு வித படபடப்பு மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது.

இதனை மருத்துவ மொழியில் கூற வேண்டும் என்றால் சிஸோஃபெரினியா என்பர். 10ம் மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் இந்த சிஸோஃபெரினியாவால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தேர்வு நேரங்களில் அவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் மற்றும் ஆழ்ந்த மனப்பயத்தால் கேட்காத குரல் கேட்பது போலவும் நடக்காத சம்பவங்கள் நடப்பது போலவும் தோன்ற ஆரம்பிக்கும். சிஸோஃபெரினியா என்பது நடக்காத ஒரு சம்பவம் நடந்து விட்டது போல் நினைத்து எப்போதும் அந்த தாக்கத்தில் இருப்பதாகும். மனதளவில் ஏற்படுகின்ற இந்த பாதிப்பு மூளையில் ஏற்படும் கெமிக்கல் இம்பேலன்சால் ஏற்படுகிறது.

பள்ளி இறுதித் தேர்வு பற்றிய பயமா.. இதைப் படிங்க.. கூல் ஆயிருவீங்க!

பள்ளிகள், ஊடகங்கள் இறுதித் தேர்வைப் பற்றி ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. மேலும் வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் 10வதாப் படிக்கிற 12வதாப் படிக்கிற நல்லப் படிக்கனும் நிறைய மார்க் வாங்கனும் என்று கூறுவதாலும், பெற்றோர்கள் பள்ளியில் இருந்து வந்தத உடனே அத சாப்பிடு இத சாப்பிடு பிரஸ்ஸாகு டியூசனுக்குப் போ நல்லப்படி என்றுக் கூறுவதாலும் இப்படி சுற்றி சுற்றி ஒரு பெரிய அழுத்தம் அனைத்து தரப்பிலும் இருந்து வருவதால் அவர்களுக்குள் அவர்களையும் அறியாமல் பேயைக் கண்டால் எவ்வளவு பயம் வருமே அதைப் போன்று இறுதித் தேர்வினைப் பற்றியும் ஒரு பெரிய பயம் மற்றும் மனதளவில் தாக்கம் ஏற்பட்டுவிடுகிறது. பள்ளி இறுதித் தேர்வில் தேறாவிட்டால் வாழ்க்கையே போனது போன்ற ஒருவிதமான எண்ணம் அவர்களுக்குள் குடி புகுந்துவிடுகிறது.

மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தால் மாணவர்களின் மூளையில் உள்ள ட்ரான்ஸ்மிட்டர்கள் உஷ்ணம் அடைந்து பீனியல் சுரப்பிகள் தடுமாறுகின்றன. கேள்வித்தாளை பார்க்கும்போது எதிர்கால உலகின் ஒட்டு மொத்த அழுத்தங்கள் ஒரு சேர அழுத்த மூளை செயலற்றதாகி விடுகிறது, அது மாதிரியான சமயங்களில் உடல் வேர்க்கும், உடல் சூடாவது போல் உணர்வார்கள், படபடப்பு வரும், கைகள், உள்ளங்கைகள் வியர்க்க ஆரம்பிக்கும்.தேர்வு பயம் கொண்ட பெரும்பாலான மாணவர்களுக்கு இது நடக்கிறது.

இந்த நோயிலிருந்து தப்பிக்க நீர் மோர் நல்ல பயனைத் தருவதாக நாட்டு மருத்துவர்கள் கூறுகிறார்கள். பசும்பாலில் கிடைக்கும் தயிரினை எடுத்து கடைந்து நீர்மோராக ஆற்றி இரண்டு டம்ளர் பருகிவிட்டு சென்றால் அதிகப்படி வியர்ப்பதும் , படபடப்பும் குறையும். மூளை உஷ்ணமடைவது தடுக்கப்படும் என நாட்டு மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதிகப்படியான அலுவலக பணிச்சுமை, நேர்முகத் தேர்வுக்குச் செல்லுபவர்கள் கூட இப்படி குடித்து வருவது நல்ல பயன் தரும். நீர் மோரைக் குடிப்பதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படப் போவதில்லை. மோர் குடிப்பதை உடலுக்கு ஆரோக்கியமான ஒன்றாகவே அனைத்து மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

மாணவர்கள் தேர்விற்குச் செல்லும் போது தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் செல்ல வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் என்பது வாழ்வில் முக்கியமான ஒன்றுதான். ஆனால் அது மட்டும் வாழ்க்கையில்லை. உங்களால் முடிந்த அளவுக்கு நன்றாகப் படியுங்கள். நல் நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஒன்று போல் இல்லை. அது போல ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களாக தனித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வி வாழ்க்கையில் அவசியம்தான் ஆனால் கல்வி மட்டும் வாழ்க்கை இல்லை. எனவே வெற்றியும் தோல்வியும் எல்லார் வாழ்க்கையிலும் மாறி மாறி வருவதுதான்.

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்பர். வெற்றியானாலும் சரி தோல்வியானாலும் சரி நாம் அதனை எப்படிப் பார்க்கிறோமோ அதைப் பொறுத்துத்தான் நம் வாழ்வு அமையும். தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்று நினைத்து முன்னேறி செல்ல வேண்டும். வெற்றியைக் கண்டு வீழ்ந்தும் விடக் கூடாது. வீழ்ந்து விட்டால் அடுத்தப் படி நம்மால் எடுத்து வைக்க முடியாது. தோல்விக்கு பல காரணம் இருக்கலாம் ஆனால் ஒரு வெற்றிக்கு பல தோல்விகள் காரணமாக இருக்கும். எனவே பயத்தை தூக்கி தூர எறிந்து விட்டு வீறு கொண்டு எழுந்து வேகத்தோடும் விவேகத்தோடும் முயற்சியுங்கள் உங்களை மிஞ்சக் கட்டாயம் யாராலும் முடியாது.

English summary
Positive thinking is a mental and emotional attitude that focuses on the bright side of life and expects positive results. A positive person anticipates happiness, health and success, and believes he or she can overcome any obstacle and difficulty.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia