ஆன்லைன் வாயிலாக பி.பி.ஏ., எம்.பி.ஏ., சேர போறீங்களா?

குடும்ப சூழல், பொருளாதாரம் உள்ளிட்ட இன்ன பிற காரணங்களால், உயர் கல்வியை எட்ட முடியாமல் தவிக்கும் இளம் தலைமுறை ஒரு பக்கம்;

'பிளஸ் டூ' இல் எடுத்த குறைந்த மதிப்பெண்ணால், நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றிருக்கும் இளம் தலைமுறை ஒரு பக்கம். மேற்குறிப்பிட்ட இரண்டும் நடைமுறையில் உள்ளன என்பதே நிதர்சனம்.

ஆர்வம் காட்டுகிறார்கள் மாணவர்கள்?

'சீட்' கிடைக்கவில்லை என, கவலைப்படாதீங்க...! கூலா இருங்க மாணவர்களே; உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க தயாராக இருக்கோம்னு; போட்டி போட்டு, நீங்க தவற விட்ட கல்லூரிகளே, தற்போது ஆன்லைன் வாயிலாக, இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்க வரிசை கட்டி உங்கள் நிற்கின்றன.

இது என்னடா மாற்றம்னு கேட்கிறீங்க தானே...! அதற்கு சின்ன 'இன்ட்ரோ' கொடுக்கம்னு நினைக்கிறேன்... 'Bore' அடிக்காது... அதனால கொஞ்சம் பொறுமையா படியுங்க...

அதன் பின்னர், பி.பி.ஏ., எம்.பி.ஏ., படிப்புகளை ஆன்லைனில் வழங்கும் முன்னணி கல்லூரிகள், படிப்பின் நன்மைகள் தகவல்களையும் படித்து தெரிஞ்சுக்கோங்க...!

'COVID-19' பெருந்தொற்றின் விளைவாக, இந்தியா உள்பட உலக நாடுகள் பெரும் அளவில் மாற்றத்தை காண நேரிட்டது. ஓட்டுமொத்த நாடும், அந்நாட்டைச் சார்ந்த அனைத்து பணிகளும் முடங்கின.

பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளான தொழில், வணிகம், தகவல் தொழில்நுட்பம், கல்வி உள்பட அனைத்து துறைகளும், தங்களை தகவமைத்து கொள்ள, இதுநாள் வரை பின்பற்றி வந்த பாரம்பரிய முறையில் இருந்து, சற்று விலகியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

குறிப்பாக, பெருந்தொற்றால் கல்வி மற்றும் கல்வி துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. புத்தகங்கள், வகுப்பறைகள் என்றிருந்த பாரம்பரிய முறை மாறி, மடிக்கணினிகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் என்றாகிவிட்டன.

இன்றைய சூழலில், தொழில்நுட்பம் வாயிலாக கல்வி என்பது தான் புதிய தாரக மந்திரம் ஆகும். அத்தகைய சூழலில், ஆன்லைன் கல்வி அல்லது டிஜிட்டல் கல்வி முறை, பாதகமா; சாதகமா என்ற கருத்து பரவலாக எழுந்தாலும், இனி வரும் நாள்களில் கல்வி முறையில் எத்தகைய மாற்றங்கள் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டிஜிட்டல் கற்றல் மூலம், ஒரு மாணவர் எங்கும், எந்த நேரத்திலும் ஆன்லைன் வகுப்புகளை அணுகலாம் என்ற நிலையும், நடைமுறை மற்றும் தொழில்நுட்ப அறிவையும் மாணவர்கள் பெற முடியும்.

தேசிய கல்விக் கொள்கை 2020க்குப் பிறகு, இந்தியா கல்வியில் ஒரு முக்கியமான மாற்றத்தை சந்தித்து வருகிறது. அத்தகைய மாற்றங்களில் உள்ள பாதக, சாதகங்கள் என்னென்ன என்பதை மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோருக்கும் புரிதல் அவசியம்.

ஒவ்வொரு துறையின் இதயம் வணிகம் தான். அந்த வணிகத்தின் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொள்ளும் படிப்பு வணிக நிர்வாகம்.

ஆன்லைன் பிபிஏ மற்றும் எம்பிஏ

பிபிஏ என்பது வணிக மேலாண்மையில் மூன்றாண்டு தொழில்முறை இளங்கலைப் படிப்பாகும். அறிவியல், கலை மற்றும் வணிகம் ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான இப்படிப்பு, மேலாண்மை மற்றும் தலைமைத்துவ திறன்களில் அறிவு மற்றும் பயிற்சியை வழங்குகிறது.

அவர்களை நிர்வாகம் சார்ந்த பாத்திரங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு தயார்படுத்துகிறது.

மேலும் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் இருவருக்கும், ஆன்லைன் வாயிலாக தங்கள் தகுதியை மேம்படுத்தும் வாய்ப்பையும் வழங்குகிறது.

ஆர்வம் காட்டுகிறார்கள் மாணவர்கள்?

எம்பிஏ

மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (எம்பிஏ) என்பது முதுகலைப் பட்டப்படிப்பு தகுதியாகும். இது உங்களுக்கு முக்கிய வணிக நடைமுறைகளைக் கற்றுக்கொடுக்கிறது.

அங்கீகாரம் பெற்ற எம்பிஏ படிப்புகள் மற்றும் வணிகப் பள்ளிகள், கணக்கியல், நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் மனித வளங்கள் உட்பட வணிகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும், வணிகத்தில் தயார்படுத்துகின்றன.

அந்த வரிசையில், 2022-23ம் கல்வியாண்டுக்கான பிபிஏ., மற்றும் எம்பிஏ., படிப்புகளில் சேர ஆர்வமாக இருக்கும் மாணவர்களுக்கு, தமிழ்நாட்டில் நாக் அங்கீகாரம் பெற்ற முன்னணி கல்லூரிகள் ஆன்லைன் வாயிலாக, மேற்குறிப்பிட்ட பாடப்பிரிவை பயிற்றுவிக்கிறது என்பதையும் தெரியப்படுத்துகிறோம் யூத்ஸ்...!
சீல் கிடைக்கவில்லை என கவலைப்படாதீங்க...! கூலா இருங்க..

ஆன்லைன் வாயிலாக, மாணவர்கள் பல்வேறு வாய்ப்புகளை பெற முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள். தமிழகத்தில் பாரதிதாசன், ஹிந்துஸ்தான் கல்லூரி, எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பிரதான கல்லூரிகள் ஆன்லைன் முறையில் பிபிஏ., எம்பிஏ., ஆகிய முதுநிலை படிப்புகளை வழங்குகின்றனர். இதுகுறித்த முழு விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக, நாங்கள் தெரிவிக்காத தகவல்களையும் அறிய முடியும்.

ஆல் தி பெஸ்ட் ஸ்டூடண்ஸ்...!'நாக்' என அழைக்கப்படும் தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) தரவரிசையில் A++ மற்றும் தேசிய அளவிலான தரவரிசையில்( NIRF) 7வது இடத்தில் இருக்கும் மணிப்பால் பல்கலைக்கழகம், MBA மற்றும் BBA படிப்புகளை ஆன்லைன் முறையில் வழங்குகிறது.

வாய்ப்பை தவற விடாமல் இங்கே கிளிக் செய்து, சேர்க்கையை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அதிக நன்மைகளை பெற, முதல் மாணவராக இணையுங்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
After National Education Policy 2020, India is aEducationists say that it is going through an important change, and the understanding of that change, the benefits and opportunities it brings, is essential for today's generation.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X