நெய்வேலி அனல் மின்நிலையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி இருக்கு....!!

Posted By:

டெல்லி: தமிழகத்தின் நெய்வேலியில் அமைந்துள்ள நெய்வேல் அனல் மின் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், தொழிற் பழகுநர் சட்டம் - 1961 இன் விதிகளுக்குட்பட்டு, கீழ் வரும் பிரிவுகளில் தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி அனல் மின்நிலையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி இருக்கு....!!

ஃபிட்டர், டர்னர், மெக்கானிக், வயர்மேன், மெக்கானிக் (டீசல்), மெக்கானிக் (டிராக்டர்) உள்ளிட்ட பணியிடங்களுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி அளிக்கப்படும். மாதாமாதம் ஊக்கத்தொகையும் உண்டு. இதற்கான பயிற்சிக்காலம் ஓராண்டு ஆகும். இதுமட்டுமல்லாமல் 2 ஆண்டு அப்ரண்டீஸ் பயிற்சியும் இங்கு உண்டு.

இந்தப் பயிற்சியில் சேர சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

01.04.2016 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் இந்தப் பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து 25.03.2016க்குள் விண்ணப்பங்களைத் தபாலில் அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

துணை பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி-607803.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதங்களை விவரங்களை https://www.nlcindia.com/careers/Advt.No_LDC_01_2016.pdf என்ற லிங்க்கில் பெறலாம்.

English summary
Neyveli Lignite Corporation has inveited applications from students for the post Turner, Fitter etc. For more details students can logon into https://www.nlcindia.com/careers/Advt.No_LDC_01_2016.pdf

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia