பிஎச்.டி. படிக்க அழைக்கிறது டெல்லி தொழில்நுட்ப பல்கலை...!!

Posted By:

டெல்லி: பிஎச்.டி. படிப்புகள் படிக்க டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை மாணவர்களிடமிருந்து வரவேற்கிறது.

இங்கு பிஎச்.டி. படிப்பை முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிஎச்.டி. படிக்க அழைக்கிறது டெல்லி தொழில்நுட்ப பல்கலை...!!

அப்ளைடு பிஸிக்ஸ், மேனேஜ்மெண்ட், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அப்ளைட் கெமிஸ்ட்ரி, மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், ஹியூமானிட்டீஸ், பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், என்விரான்மெண்ட் என்ஜினீயரிங், அப்ளைட் மேத்தமெட்டிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இங்கு பிஎச்.டி. படிக்க முடியும்.

ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்ப இங்கு கிளிக் செய்யுங்கள்.

http://www.dtuadmissions.nic.in/default.aspx

தேர்வு செய்யும் விதம்: இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பட்டமேற்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

விண்ணப்பங்களை ஜூன் 6-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். எழுத்துத் தேர்வு ஜூன் 26-ம் தேதியும், நேர்முகத் தேர்வு ஜூன் 27, 28-ம் தேதிகளிலும் நடைபெறும்.

English summary
Delhi Technological University (DTU), Delhi has invited applications for admission to full time and part time Doctor of Philosophy (Ph.D) programmes for the academic year 2016. Selection Procedure: Candidates will be selected based on the written test and interview, conducted by the Ph.D coordinator in the respective departments. Important Dates: Last date to submit filled in application form: June 06, 2016 Date of written test: June 26, 2016 Date of interview: June 27, 2016 and June 28, 2016

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia