பெரியார் பல்கலை பருவத் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

Posted By:

சென்னை: பெரியார் பல்கலைக்கழகத்துக்கான பருவத் தேர்வுகளுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் பருவத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.

பெரியார் பல்கலை பருவத் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 'பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பருவத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளமான www.periyaruniversity.ac.in மூலம் அந்த கல்லூரியில் ஆன்லைன் மூலம் கணினியில் பதிவு செய்யும் முறை நேற்று முதல் தொடங்கியது.

வரும் பிப்ரவரி 15-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். மேலும் தேர்வு கட்டணங்கள் அனைத்தும் நேரடியாக online payment RTGS (Union Bank) என்ற முறையில் செலுத்தப்படுவதால், கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் முழுமையாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பிப்ரவரி 15-ந்தேதிக்கு பின்னர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இயலாது.

இவ்வாறு துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

English summary
Periyar University vice chancellor has announced that the students can send the applications through online for semester exams.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia