யூஜிசியின் டிஎன் செட் தேர்வுக்கு டிசம்பர் 18 முதல் விண்ணப்பிக்கலாம்

Posted By:

கல்லுரி பேராசிரியர் பணிக்குத்தகுதி பெறுவதற்கான மாநில அளவிலான தகுதி தேர்வுக்கு (டி.என.செட் 2018) 18 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சம்ர்பிக்கலாம்.

டிசம்பர் 18 முதல் டிஎன் சேட் தேர்வுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிப்பு

கல்லுரி பல்கலைக்கழகங்களில் பேராசியர் பணி வாய்ப்பு பெற முதுநிலை பட்டப் படிப்பை முடித்து தேசிய அளவிலான தகுத் தேர்வு நெட்அல்லது மாநில அளவிலான தகுதி செட் ஆகிய தேர்வுகள் இரண்டில் ஏதாவது ஒரு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நெட் தேர்வை பல்கலை கழகம் மானியக் குழுவான யூஜிசி ,சிபிஎஸ்சி மூலமாக மத்திய அரசு நடத்தி வருகின்றது . மாநில அளவிலான தேர்வை செட் நடத்தும். யூஜிசியின் அனுமதியுடன் மாநில பல்கலைகழகங்கள் நடத்தலாம்.

தமிழகத்தில் கொடைக்கானல் பல்கலைகழகம் 2015 முதல் இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகின்றது . 2018 ஆம் ஆண்டிற்கான செட் தேர்வு அறிவிப்பை கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைகழகம் நடத்தும் .

தமிழகத்தில் மார்ச் 4 முதல் தேர்வு மார்ச் 18 வரை நடத்தவுள்ளது. 18 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்பிக்ககூடிய கடைசி தேதி பிப்ரவரி 9 ஆகும்

மொத்தம் 21 பாடங்களின் கீழ் இந்த தேர்வு நடத்தப்படுகின்றது. தமிழகம் முழுவதும் சென்னை, வேலூர், ஈரோடு , தஞ்சை, திருநெல்வேலி, விழுப்புரம், காரைக்குடி, வேலூர், தஞ்சை ஆகிய 11 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

தமிழ்நாடு செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கும் , ஒபிசி கிரிமி லேயர் பிரிவினருக்கும் ரூபாய் 1500 கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிமி லேயர் அல்லாதவர்க்கு ரூபாய் 1250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஸ்எசி, எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது . மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

English summary
here article tell about UGC TN-SET exams for PG aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia