எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். விண்ணப்பம்... நாளை முதல் விநியோகம்!

சென்னை : தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

பிளஸ் 2 படிப்பில் உயிரியல்- இயற்பியல்- வேதியியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ப்பதற்கு விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்குவதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்த விண்ணப்பங்களை சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

இந்தாண்டு மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

வேண்டுகோள் கடிதம்...

வேண்டுகோள் கடிதம்...

எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தைப் பெற, வேண்டுகோள் கடிதத்துடன் 'Secretary, Selection Committee, Kilpauk, Chennai' என்ற பெயரில் விண்ணப்பக் கட்டணமான ரூ. 500-க்கு வரைவுக் காசோலை அளிக்க வேண்டும்.

இணையதளம் மூலமாக...

இணையதளம் மூலமாக...

சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org மூலமும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விநியோகம் தொடங்கும் நாளை பகல் 12 மணிமுதல் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

சிறப்புப் படிவங்கள்...

சிறப்புப் படிவங்கள்...

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்- மாற்றுத் திறனாளிகள்- முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் படிவங்கள் ஏற்கெனவே சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரே விண்ணப்பம்...

ஒரே விண்ணப்பம்...

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

கடைசி நாள்...

கடைசி நாள்...

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்துசேர, வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 15-ஆம் தேதிக்குள் தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது. ஜூன் மாதம் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் பி.இ. கலந்தாய்வுக்கு முன்னதாக எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பி.இ. விண்ணப்பம்...

பி.இ. விண்ணப்பம்...

இதற்கிடையே, 2015-16 கல்வியாண்டு பி.இ. கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. நேற்று மாலை 5 மணி வரை 1 லட்சத்து 30 ஆயிரத்து 510 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி...

கடைசி தேதி...

மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The sale of application forms for MBBS and BDS admissions for the academic year 2015-16 will begin on May 11. The forms will be available until May 28 in all the government medical and dental colleges across the State.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X