அரசு கலைக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பங்கள் விற்பனைக்கு!

Posted By:

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.

விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 25, பதிவுக் கட்டணம் ரூபாய் 2 என மொத்தம் ரூபாய் 27 செலுத்தி விண்ணப்பத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூபாய் 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

அரசு கலைக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பங்கள் விற்பனைக்கு!

தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இம்முறை முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

English summary
Application sale starts today onwards in government arts and science colleges for plus two students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia