செவிலிய உதவியாளர் படிப்பு: விண்ணப்ப விநியோகம் ஆரம்பம்

Posted By:

சென்னை: செவிலிய உதவியாளர் உள்ளிட்ட துணை மருத்துவப் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தற்போது தொடங்கியுள்ளது.

செவிலிய உதவியாளர், ஆப்டோமெட்ரி பட்டயப்படிப்பு, மருத்துவப் பதிவேடு அறிவியல் பட்டயப் படிப்பு ஆகியப் படிப்புகளுக்கு தமிழகத்தில் நல்ல மவுசு உள்ளது. இந்த படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.250 ஆகும்.

தமிழக அரசின் www.tnhealth.org, www.tngov.in ஆகிய இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப விநியோகத்துக்கான கடைசி தேதி அக்டோபர் 26-ஆம் தேதி ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 27-ம் தேதிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும். நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இடங்கள் பூர்த்தி செய்யப்படும். இத்தகவலை மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Applications for the Nursing Assistants courses has distributed in 20 Medical colleges and Chennai Guindy King institutes. Students can download the applications from the sites www.tnhealth.org, www.tngov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia