இசையில் வித்வான் ஆக வேண்டுமா? அப்ப கிளம்புங்க... திருவாரூர் இசைப் பள்ளிக்கு!

Posted By:

சென்னை: இசை்கலையில் பல்வேறு வித்வான்களை உருவாக்கித் தந்த திருவாரூர் இசைப் பள்ளியில் இந்தாண்டு மாணவர் சேர்க்க நடைபெறவுள்ளது.

திருவாரூர் - மயிலாடுதுறை சாலை புதுத்தெருவில் மாவட்ட அரசு இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் கலைப் பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் இப்பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகள் மூன்று ஆண்டு முழுநேர பயிற்சி அளிக்கப்பட்டு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இசையில் வித்வான் ஆக வேண்டுமா? அப்ப கிளம்புங்க... திருவாரூர் இசைப் பள்ளிக்கு!

பல ஆண்டுகளாக இசையுலகுக்காக பலரை உருவாக்கித் தந்தது இந்த பள்ளி. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகைய்யர் பிறந்த புண்ணியத் தலம் இது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2015-16-ம் கல்வியாண்டில் சேர்ந்து படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.

இசைப்பள்ளி மாணவர்களுக்கு அரசு விதிப்படி, இலவச விடுதி, கல்வித் உதவித்தொகை, இலவச பேருந்து கட்டண சலுகைகள் மற்றும் மாதந்தோறும் கல்வித் ஊக்கத்தொகை ரூ. 400 வழங்கப்படுகிறது. இசைப்பள்ளியில் 12 முதல் 25 வயதுக்குள்பட்டவர்கள் சேரலாம். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

நாகசுரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும். ஆண்டு ஒன்றுக்கு கல்வி கட்டணம் ரூ. 152 செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகள் சேர்க்கை ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியை தொடர்பு கொள்ளலாம்.

English summary
Applications invited for various music courses in Thiruvaroor music school for academic year of 2015-2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia