மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Posted By:

சென்னை: மத்திய அரிசி ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டில் காலியாகவுள்ள பல்வேறு டெக்னீஷியன் பணியிடங்களுக்கு நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டும் வரும் ICAR-Central Rice Research Institute- தான் இந்த் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து டெக்னீஷியன்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

டெக்னீஷியன் துறையில் எலக்ட்ரீசியன், மெக்கானிக், ஃபீல்ட், லேபாரட்டரி, ஃபிட்டர், ஃடிராப்ட்ஸ்மேன், ஆகிய பிரிவுகளில் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை கட்டாக் நகரில் மாற்றத்தக் வகையில் ICAR Unit CRRI என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Senior Administrative Officer, Central Rice Research Institute, Cuttack-753006, Odisha. என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20.07.2015-க்குள் வந்து சேரவேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.crri.nic.in/Adv_1_15_Technical_20Jul15.pdf என்ற இணையதள முகவரிக்குச் சென்று பார்க்கலாம்.

English summary
Applications has been invited for technicians in ICAR-Central Rice Research Institute. The applicants can apply for the post through post by july 20, 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia