பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் செவிலியர், டெக்னீஷியன் வேலையிருக்கு... அப்ளை பண்ணுங்க!

Posted By:

சென்னை: மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில்(பிஏஆர்சி) செவிலியர், டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதன்மையான அணு ஆராய்ச்சி மையமான பாபா அணு ஆராய்ச்சி மையம் பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் சென்று வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நேரடியாக இயங்கி வருகிறது பாபா அணு ஆராய்ச்சி மையம்.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் செவிலியர், டெக்னீஷியன் வேலையிருக்கு... அப்ளை பண்ணுங்க!

இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பாபா அணு ஆராய்ச்சி மையம் வரவேற்றுள்ளது.

காலியாக உள்ள பணியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 20

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Nurse/A - 08
2. Sub-Officer/B - 01
3. Fireman/A - 07
4. SA/B (Horticulture) - 01
5. Pharmacist/B - 01
6. Technician/B (Receptionist) - 02

செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியுடன் செவிலியர் துறையில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி நர்சிங் படிப்போ முடித்திருக்க வேண்டியது அவசியம்.

ஃபையர்மேன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் மத்திய அரசின் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டியது நலம்.
இவர்களுக்கு வயதுவரம்பு: 18 முதல் 43-க்குள் இருக்க வேண்டும்.

மேலும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2015.

விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.barc.gov.in/careers/vacancy264.pdf என்ற இணையதளத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க குறுகிய காலமே உள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது.

English summary
Applications has been invited for Nurses, Technicians, Fireman, Pharmacist job in Bhabha atomic research centre, Mumbai.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia