அரசு திரைப்பட கல்லூரியில் படிக்க விருப்பமா? விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

Posted By: Kani

இன்றைய தேதிக்கு திரைப்பட பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள் சென்னையைச் சுற்றிலும் எக்கச்சக்கமாக முளைத்துவிட்டன. கட்டணமோ பகல் கொள்ளை.

பத்து லட்சம், பதினைந்து லட்சம் என்று போகிறது. இவற்றிலெல்லாம் சினிமாவைக் கற்றுக் கொள்ள முடியாது. காரணம் மோசமான உள்கட்டமைப்பு வசதி. சரியான, அனுபமிக்க பயிற்றுநர்கள் இல்லாமை. ஆனால் அரசு திரைப்படக் கல்லூரி அப்படியல்ல.

பரந்து விரிந்த நிலப்பரப்பில், சகல வசதிகளோடும் அமைந்துள்ளது. பல ஆண்டு அனுபவம் மிக்க பயிற்றுநர்கள், ஏகப்பட்ட உள், வெளிநாட்டுத் திரைப் படங்கள், புத்தகங்கள் அடங்கிய பிரமாதமான லைப்ரரி... எல்லாவற்றையும் விட, மிகக் குறைந்த கட்டணம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறையின் கீழ் இயங்கி வரும் எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு திரைப்படக் கல்லூரியில் சேருவது மட்டுமே மாணவர்களுக்கு முழுமையான பலன் தரும். இதோ இந்த ஆண்டுக்கான அரசின் சேர்க்கை அறிவிப்பு:

இதில் தற்போது 2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திரைப்பட தொழில்நுட்பங்கள் பயில விரும்பும் மாணவ, மாணவியரிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்களை 10-5-2018 முதல் கல்லூரியில் நேரில் பெற்றும், இணையதளத்தில் இருந்து டவுண்லோட் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

கல்விக் கட்டணமாக ரூ.15,000/-மும், சிறப்புக் கட்டணமாக ரூ.2,000/-மும், வளர்ச்சிக் கட்டணமாக ரூ.1,000/-மும் வசூலிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முற்றிலுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது.

இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் இருந்து விணணப்பத்தை பெறலாம். 

மைக்கேல் ஜாக்‌சனாகணுமா...? உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை உங்களுக்கான கல்லூரிகள்!

English summary
Applications invited to join M.G.R Government Film & Television Institute

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia