கல்வி உதவித்தொகையுடன் பிரிட்டனில் படிக்க விருப்பமா...!!

Posted By:

டெல்லி: கல்வி உதவித்தொகையுடன் பிரிட்டனில் உயர்கல்வி விரும்பும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிட்டனிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் இந்த உதவித்தொகையை அறிவித்துள்ளது. கோவா கல்வி அறக்கட்டளை உதவித்தொகை(ஜிஇடி) என இந்த உதவித்தொகை திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரிட்டனில் உதவித்தொகையுடன் இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயிலலாம்.

கல்வி உதவித்தொகையுடன் பிரிட்டனில் படிக்க விருப்பமா...!!

இதழியல், உயர்கல்வி, சட்டம், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் அவர்கள் உயர்கல்வி பெற முடியும்.

பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணஐந்து இந்த உதவித்தொகைத் திட்டமானது கோவாவிலுள்ள டெம்போ அண்ட் ஃபோமன்டோ நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

தகுந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய மாணவர்கள் இந்த உதவித்தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 15 ஆயிரம் பிரிட்டன் பவுண்டுகள் வரை உதவித்தொகைக் கிடைக்கும்.

இந்தத் தகவலை பிரிட்டன் கவுன்சில் இந்தியா இயக்குநர் (இந்தியா) கில் கால்டிகாட் தெரிவித்தார்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.britishcouncil.in/study-uk/scholarships/goa-education-trust-scholarships என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

English summary
The British Council, UK's International organisation for educational and cultural relations announces Goa Education Trust scholarships to the UK. These scholarships will fund Indians to pursue a Masters in the UK in various disciplines including Journalism, Education, Ancient History and Law. Goa Education Trust Scholarship (GET) is open to all Indian nationals with valid Indian passport

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia