அரசு இசைக் கல்லூரியில் டிரைவர் வேலை... உடனே அப்ளை பண்ணுங்க!

Posted By:

சென்னை: தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் டிரைவர் பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடத்துக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சென்னை தமிழக அரசு இசைக் கல்லூரியில் காலியிடமாக உள்ள, ஒரு டிரைவர் பணியிடம் இனசுழற்சி முறையில், ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்) பிரிவின் கீழ் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.

இந்தப் பணியிடத்துக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன், 5 ஆண்டுகளுக்கு மேல் ஓட்டுநர் பணியில் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 1, 2015 தேதியன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.5,200- ரூ.20,200 அகவிலைப்படி ரூ.2400 சேர்த்து ஊதியமாக அளிக்கப்படும்.

இதற்கான கல்வித் தகுதியுடையோர், ஓட்டுநர் அனுபவம் உள்ளிட்ட விவரங்களை, உரிய சான்றுகளுடன், "முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, டி.ஜி.எஸ் தினகரன் சாலை, சென்னை-28' என்ற முகவரிக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Applications has been invited for driver job in Govt Music College, Chennai. Eligible persons can apply for the job before july 31st.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia