வங்கி வேலைவாய்ப்பு வேண்டுமா? வாய்ப்பு தருகிறது ஐடிபிஐ!!

Posted By:

சென்னை: வங்கியில் பணியாற்றக்கூடிய வாய்ப்புகளை அள்ளித் தருகிறது மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தொழிற்துறை வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கி.

டிபிஐ வங்கியில் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பணியாளர் பணியிடங்களை விரைவில் நிரப்பஉள்ளது வங்கி நிர்வாகம். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது ஐடிபிஐ வங்கி நிர்வாகம்.

வங்கி வேலைவாய்ப்பு வேண்டுமா? வாய்ப்பு தருகிறது ஐடிபிஐ!!

பணியிடங்கள் விவரம்:

பணி: Assistant Manager Grade-A
காலியிடங்கள்: 500
சம்பளம்: மாதம் ரூ.14,400 - 40,900

இந்தப் பணியிடங்களில் சேர்வதற்கு வயதுவரம்பு கடந்த 01.06.2015 தேதியின்படி 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி என்று வரும்போது ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.

உதவி மேலாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முறையானது எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என தேர்வுகள் இருக்கும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெங்களூரில் உள்ள Manipal School of Banking கல்லூரியில் ஒரு வருட டிப்ளமோ படிப்பிற்கு அனுமதிக்கப்படுவர். படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் பணிக்கு செய்யப்படுவார்கள்.

இந்தப் படிப்புக்கு Post Graduate Diploma in Banking & Finance (PGDBF) என்று பெயர். இதற்கான பயிற்சிக்காலம் ஓராண்டாகும். எழுத்துத் தேர்வு 02.08.2015 தேதியில் நடைபெறும்.

இதற்காக தமிழகத்தில் ஆன்லைன் எழுத்துத்தேர்வுகள் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும்.

இந்த பணியிட விண்ணப்பத்துக்கு கட்டணமாக ரூ.700 பெறப்படும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.150 வசூலிக்கப்படும். இதனை ஐடிபிஐ வங்கியின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கு குறைந்த அளவிலே காலம் உள்ளது. வரும் 24-ம் தேதிக்குள்(ஜூன் 24)இந்தத் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.idbi.com/pdf/careers/Detailed_Advertisment_MGES_2015_process_IBPS_May_27.pdf என்ற இணையதள லிங்க்கில் காணலாம்.

English summary
Applications invited for assistant managers in IDBI bank. The applicants can apply for the post through online.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia