தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் மே 12 முதல் விண்ணப்ப விநியோகம்...!!

Posted By:

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மே 12 முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் மே 12 முதல் விண்ணப்ப விநியோகம்...!!

இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் இளம் அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் உள்ளிட்ட 6 படிப்புகளும், இளம் தொழில்நுட்பப் படிப்புகளில் உயிர்த் தொழில்நுட்பவியல், உயிர்த் தகவலியல் உள்ளிட்ட 7 படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். 2016-17-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பம் விநியோகம் குறித்த அறிவிப்பு மே 4-ஆம் தேதி வெளியாகும்.

மாணவர்கள் மே 12-ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, பதிவு செய்ய வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ.600, எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் ரூ.300 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 11-ஆம் தேதி கடைசி நாள் என்றார் அவர்.

English summary
Tamilnadu Agriculture University management will issues Applications from May 12. Students can downloqad the applications from the University site and they will apply through online only, Vice-chancellor Ramasamy ha said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia