அரசு கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.23 அதிகரிப்பு..!

Posted By:

சென்னை : தமிழ்நாட்டில் 80 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் 139 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளும் 467 சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளும் செயல்பட்டுவருகின்றன.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இந்த மாதம் மே 12ந் தேதி வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் ஒரு சில சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க ஆரம்பித்து விட்டனர்.

அரசு கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம் செய்வது இன்னும் தொடங்கப்பட வில்லை. எனினும் விண்ணப்பத்தின் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

அரசு கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.23 அதிகரிப்பு..!

கடந்த வருடம் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர விண்ணப்பத்தின் விலை ரூ. 25/- ஆக இருந்தது. ஆனால் இந்த வருடம் விண்ணப்பத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர விண்ணப்பத்தின் விலை ரூ. 48/- ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 23 அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில வருடங்களாக என்ஜினீயரிங் படிப்பை விட கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவதும், இந்த படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

English summary
At present, the application for joining bachelor's degree in government arts science colleges is Rs. 48/-

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia