எட்டாம் வகுப்பு மட்டும் படித்திருக்கிறிர்களா அப்போ வாங்க இசை கல்லுரியில் சேர வாய்ப்பு

Posted By:

 உங்களது வயது 25க்குள் எட்டாம் வகுப்பு மட்டும் படித்திருக்கிறிர்களா அப்போ வாங்க இசை கல்லுரியில் சேர அருமையான வாய்ப்பு

விழுப்புரம் இசை கல்லுரியில் சேர வாய்ப்பு நாளை முதல் விண்ணப்பம் பெறலாம்


விழுப்புரம் மாவட்ட இசை கல்லுரியில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகின்றது . மாணவர்கள் 07/06/2017 நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பம் பெற்றுகொள்ளலாம் . விழுப்புரம் மாவட்ட இசைகல்லுரியில் கிராமப்புற மாணவர்கள் இசை , நடனம் போன்றவைகள் கற்றுகொள்ளவும் , மேலும் இசை நடனம் தொடர்பான துறைகளுக்கான வேலை வாய்ப்புகள் உள்நாடு வெளிநாடு முழுவதும் கிடைப்பதால் அவற்றை கற்றுத்தரும் நோக்குடன் இசை கல்லுரி செயல்படுகின்றது. விழுப்புரம் இசை பள்ளியில் நாகசுவரம், தவில, தேவாரம், வயலின் மிருதங்கம் பரத நாட்டியம் கற்றுகொடுக்கப் படுகின்றன. அனைத்து மாவட்ட மக்களும் பங்கு கொண்டு பயில உதவியாக இருக்கும் என்ற நோக்குடன் இந்த கல்லுரி விண்ணப்பங்களை வழங்குகின்றது .

இக்கல்லுரியில் பயில் வயதுவரம்பு 12 முதல் 25 ஆகும் . குரலிசை, பரத நாட்டியம், வயலின் மிருதங்கம் இவற்றில் சேர எட்டாம் வகுப்பு தகுதி போதுமானது ஆகும் . மூன்று வருடம் படிப்பு காலம் முடிந்த பின் அரசு தேர்வு நடத்தி சான்றிதல் வழங்கும். இந்த பயிற்சியானது இருபாலருக்கும் வழங்கப்படுகிறது . பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும் .
மாணவர்கள் இப்பயிற்சி பெற கல்வி உதவி தொகையும் இலவச பேரூந்து வசதியும் வழங்கப்படுகின்றன. விழுப்புரம் இசை பள்ளியில் சேர விண்ணப்பங்களை மாவட்ட இசைப்பள்ளி, நகராட்சி விளையாட்டுதிடல் ,விழுப்புரம். என்ற முகவரியில் பெற்று கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார் .

English summary
here article tell about application issuing in music college of vizupuram

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia