வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் மீண்டும் புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் அவகாசத் தேதி இன்றுடன் (ஜனவரி 24) முடிவடைகிறது.

கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில், மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாகச் சிறப்பு புதுப்பித்தல் சலுகையை சமீபத்தில் தமிழக அரசு அளித்துள்ளது.
அதன்படி புதுப்பித்தல் சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்களிடம் இருந்து பதிவுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த புதுப்பிக்க வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் (ஜன. 24) முடிவடைகிறது. தற்போது வரையிலும் புதுப்பிக்காதவர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரி வாயிலாகவும் புதுப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












