கல்வித் துறையில் புதுமை படைப்போருக்கு ஆண்டுதோறும் விருது: மத்திய அரசு முடிவு

Posted By:

சென்னை: கல்வித்துறையில் புதுமையான படைப்புகளைக் கொண்டு வருபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குவதற்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இத்தகவலை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்ட அளவிலும் இதுபோன்று கல்வியில் புதுமை புகுத்துபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

கல்வித் துறையில் புதுமை படைப்போருக்கு ஆண்டுதோறும் விருது: மத்திய அரசு முடிவு

மாவட்டம் முதல் ஒன்றிய அளவில் வரை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுடன் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

இதுதொடர்பாக ஆலோசித்து பரிந்துரைகளை வழங்குமாறு நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் எஜுககேஷனல் பிளானிங் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷனுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவிகளுக்கு கழிப்பறைகளைக் கட்டித் தர மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அடுத்த ஓராண்டு காலத்தில் இந்த கழிப்பறைகள் கட்டி முடிக்கப்படும் என்றார் அவர்.

Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia