என்ஜீனியரிங் 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு...!

Posted By:

சென்னை : என்ஜீனியரிங் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு என்ஜீனியரிங் படிப்புக்கு மே 17 இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பில் உள்ள அரசு, தனியார் என்ஜீனியரிங் கல்லூரிகளில் டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி முடித்தோர் இரண்டாம் ஆண்டு என்ஜீனியரிங் படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.

என்ஜீனியரிங் 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு...!

இதற்கான தமிழக அரசின் கவுன்சிலிங் காரைக்குடி அழகப்பா செட்டியார் என்ஜீனியரிங் கல்லூரி மூலம் நடத்தப்படுகிறது.

வரும் கல்வி ஆண்டில் பி.இ. பி.டெக் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 17 முதல் ஜூன் 14ந் தேதி வரை http://www.accet.co.in/, மற்றும் http://www.accet.edu.in/ ஆகிய இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களை ஜூன் 14 மாலை 5.00 மணிக்குள், காரைக்குடி அழகப்ப செட்டியார் கல்லூரி முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
You can apply for the second year engineering course in Engineering Colleges on May 17th

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia