கல்வி கண்த்திறந்த கர்ம வீரர் காமராஜ் நினைவுதினம் இன்று !!!

Posted By:

கருப்பு காந்தி கல்வி கண் திறந்த காமராசர் அவர்களின் நினைவுதினம் இன்று . படிக்காத மேதை மக்களின் நாயகனாக இருந்தவர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் காமராசர் .

1954இல் தமிழ்நாட்டு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் .பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று பள்ளிகளின் எண்ண்க்கையை அதிகப்படுத்தினார்.

காமராஜர் ஒரு சகாப்தம் என்றும் நிலைக்கு கல்விமான்

1903 ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் பிறந்தார் அணைகள் பல கட்டி விவசாயத்திற்கு சிறப்பான வழிகாட்டியாக இருந்தார் . நாட்டில் கல்வி வளர மிகுந்த திட்டங்களை தீட்டினார் .

நாட்டின் பிரதமர் பொருப்பை ஏற்கும் தகுதியும் பெற்றார் ஆனால் அதனை விடுத்து பிரதமர்களை உருவாக்கினார் . மிகச்சிறந்த தலைவராக மனிதராக எளிய வாழ்க்கை வாழ்ந்தார் . ஆடம்பர வாழ்க்கையை விடுத்து அனைத்து மக்களின் நலனுக்கு உதவிகரமாக இருந்தார் . கிங் மேக்கர் எனவும் பெருமிதத்துடன் அழைக்கப்பட்டவர் காமராசர் .

சுதந்திர போராட்ட காலமுதல் நாடு விடுதலை அடைந்தது வரை சிறப்பான தேசியப்பணியாற்றினார் தலைவர் .காமராசரின் அரசியல் குரு சத்திய மூர்த்தி ஆவார்.
காமராஜர் காலத்தில் குறைந்தஆட்சி செலவே செய்தார் 8 அமைச்சர்கள் மட்டுமே காமராஜ் கொண்டிருந்தார். 27000 பள்ளிகள் அதிகரிக்கப்பட்டிருந்தது அத்துடன் கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது . இந்திய தொழில்நுட்ப கல்லுரி நிறுவனம் தொடங்கப்பட்டது .

பவானி திட்டம் , மேட்டூர் கால்வாய் திட்டம் , காவிரி டெல்டா திட்டம், மணிமுத்தாறு , அமராவதி, வைகை , சாத்தணுர்,கிருஷ்ணகிரி ஆரணியாறு ஆகியவை அவர்காலத்தில் உருவாக்கப்பட்டது ஆகும் . இவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் இன்றவும் ஆசியாவிலேயே புகழ் பெற்று விளங்குகிறது .

மேட்டூர் காகித தொழிற்சாலை அத்துடன் பெல் நிறுவனம், நெய்வேலி சுரங்க தொழிற்சாலைகள், கிண்டி மருத்துவ சோதனை கருவிகள் தொழிற்சாலை அனைத்தும் இவரது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது ஆகும். கே பிளான் கொண்டு வந்து கட்சியின் மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு  இடமளித்தல் இவர் காலத்தில் கொண்டு வரப்பட்டது ஆகும் . இவ்வளவு சிறப்பு பெற்றவர் காமராசர் அவரில்லையேல் தமிழ்நாட்டில் இவ்வளவு வளர்ச்சியும் நாட்டில் இந்திரா போன்ற சிறந்த ஆட்சியாளர்களும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை நாம் பெருமிதம் கொள்வோம் காமராசர் பிறந்த மண்ணில் பிறந்திருக்கின்றோம் அத்துடன் காமராசரின் வாழ்வை முன்னுதரணமாக கொண்டு மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று சமுகம் தேசம் தலைக்க பங்காற்றுவோம். காமராஜ் அவர்கள் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் இறந்தார் அவர் படைத்த சாதனைகளை படித்து நாமும் படைபோம் .

சார்ந்த பதிவுகள்:

அகிம்சையின் திருவுருவம் அண்ணல் காந்தி பிறந்த தினம் இன்று 

செய் அல்லது செத்துமடி, ஜெய்ஹிந்த் இரண்டும் 75 வருடங்களை கடந்து நிற்கிறது

English summary
here article tell about kamaraj achivement

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia