மாணவர்களே !! அண்ணா பல்கலைகழகத்தின் பருவகால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

Posted By:

அண்ணா பல்கலைகழகத்தில் தேர்வுகால அட்டவணைகள் மற்றும் பருவ கால வகுப்புகள் தொடங்குவது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தின் அறிவிப்பில் இந்தாண்டு 2017ன் பருவ கால தொடக்கம் 1.8.2017ல் தொடங்கப்படும் . மேலும் இந்தாண்டு பருவகாலத்தின் செயல்முறை தேர்வுகள் கால அட்டவனைகள் மற்றும் தேர்வு கால அட்டவணைகள் மீண்டும் வகுப்புகள் தொடங்குவதை கால அட்டவணை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைகழகப் பருவகால அட்டவணைகள் மாணவர்களை தேர்வுக்குத் தயாராக வழிவகுக்கும்

தொழிற் சார்ந்த வகுப்புகளை 45 முதல் 50  நாட்களுக்கு நடத்தப்படும் தொழிற்முறை வகுப்புகளை குறைத்து நடைமுறை வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து 14 முதல் 28 நாளாக மாற்றப்பட்டுள்ளது.

புதிய தேர்வுகால அட்டவணை ஆகஸ்ட் 1.2017ல் தொடங்குகிறது. 2013 ஒழுங்குமுறை விதிகளின் படி தேர்வுகள் அட்டவனைகள் வெளியீடு 20.7.2017 அன்று வெளியிடப்பட்ட அட்டவனைகளின் படி 21.10.2017ல கடைசி வேலை நாள் ஆகும்.

செய்முறைத் தேர்வுகள் 23.10.2017 முதல் 28.10,2017 ஒருவாரம் நடைபெறும். இறுதி தேர்வுகள் 30.10.2017ல் தொடங்கி 30.11.2017 நான்கு வாரங்கள் நடைபெறும். 17.12.2017 ஆம் நாள் இரண்டாம் பருவ வகுப்புகள் விடுமுறைக்கு பின் தொடங்கப்படும் .

18.12.2017 ஆம் நாள்  இரண்டாம் பருவத்தின் வகுப்புகள் தொடங்கும் . இவ்வாறு ஒரு பருவ காலத்தின் தேர்வுகள் நடத்தப்படும் முழு விவரங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படுவாதால் மாணவர்கள் மனஉலைச்சல் குறைந்து படிப்பது மற்றும் தேர்வுகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். அதற்க்காக முன்கூட்டியே திட்டமிட்டு படிக்க மாணவர்களுக்கும் உதவ   பெற்றோர்களுக்கும் எளிதாகும். ஒழுங்குமுறை  விதிகள் 2013ன் கிழ்  உருவாக்கப்பட்ட கால அட்டவணை விவரங்கள் தெரிந்துகொள்ள இணையத்தள முகவரி  மூலம் அறிந்து கொள்ளலாம்.

சார்ந்த பதிவுகள் :

இன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது .கல்லுரிகளின் தரவரிசை விரைவில் வெளியிடப்படும் 

பி.இ. படிப்புக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது..!! 

English summary
here article deal about exam timetable of Anna univesity

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia