அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்கணுமா? ரேண்டம் எண் நாளை வெளியாகிறது

Posted By:

சென்னை: சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான சமவாய்ப்பு எண்(ரேண்டம் எண்) நாளை(ஜூன் 19) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரக் கல்வி அளிப்பதில் மிக அதிக மாணவர்களைக் கொண்டதாகச் செயல்பட்டு வருகிறது அண்ணாமலை பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புகள் மிகச் சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வருவதால் இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் சேர்ந்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பேர் இங்கு வருகின்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்கணுமா? ரேண்டம் எண் நாளை வெளியாகிறது

இந்த நிலையில் இங்கு 10 பிரிவில் பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த மே 6-ம் தேதி முதல் வழங்கப்பட்டது. இதுவரை 2,431 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

பல்கலைக்கழகத்தில் 2,130 மாணவ, மாணவிகள் தனி கலந்தாய்வு மூலம் அனுமதிச் சேர்க்கை செய்யப்படவுள்ளனர். மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படுவர். தமிழக அரசு இட ஒதுக்கீடு விதிப்படியும், மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதனடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

இந்நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) நாளை (ஜூன் 19) வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தில் துணைவேந்தர் செ.மணியன் வெளியிடுகிறார்.

மேலும் ரேண்டம் எண்களை விண்ணப்பதாரர்களின் பார்வைக்காக பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annamalaiuniversity.ac.in) பதிவேற்றம் செய்யப்படும். மாணவர்கள் இணையதளம் வழியாக ரேண்டம் நம்பர்களைப் பார்த்துக்கொள்ளலாம்.

English summary
Annamalai university, Chidambaram will release BE course random numbers on june 19. Students can see the random numbers on university website www.annamalaiuniversity.ac.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia