அப்ளைடு எகனாமிக்ஸ், சோஷியாலஜி படிக்க– அண்ணமலைப் பல்கலையில் விண்ணப்பிங்க

Posted By:

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கேற்ற பல்வேறு படிப்புகள் நேரடியாகவும், பகுதி நேரமாகவும், தொலைநிலைக்கல்வி வழியிலும் வழங்கப்படுகின்றன.

பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக முதுகலை படிப்பை முடிக்கும் அளவுக்கு 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

அப்ளைடு எகனாமிக்ஸ், சோஷியாலஜி படிக்க– அண்ணமலைப் பல்கலையில் விண்ணப்பிங்க

இதில் எம்.ஏ ஆங்கிலம், கம்யூனிகேஷன்ஸ், வரலாறு மற்றும் பாரம்பரிய நிர்வாகம், அரசியல், அறிவியல், அப்ளைடு எகனாமிக்ஸ், அப்ளைடு சோஷியாலஜி, பாப்புலேஷன் அண்ட் டெவலப்மென்ட், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன.

எம்.காம், எம்.எல்.ஐ..எஸ், எம்எஸ்சி கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்கள் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனுடனும், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் ,சயின்ஸ், வேதியியல், அப்ளைடு ஜியாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ், மெட்டீரியல்ஸ் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பாடங்களும் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் உள்ளன.

இப்படிப்புகளில் சேர அடிப்படை கல்வித்தகுதி மாணவர் சேர்க்கை இடங்கள் கல்விக்கட்டணம் உள்ளிட்ட விவரங்களை www.annamalai university.ac.in என்ற இணையதளத்திலோ 04144&238248/263/796 ஆகிய தொலைபேசி எண்களிலோ தெரிந்து கொள்ளலாம்.

English summary
Chidhaparam annamalai university announced various courses for different type of departments.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia