அண்ணாமலை பல்கலை.யில் ஜூன் 27, 28-ல் தொடங்குகிறது பி.இ. கவுன்சிலிங்

Posted By:

சென்னை: பெருமைமிகு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் (பி.இ) கவுன்சிலிங் ஜூன் 27, 28-ல் தொடங்கவுள்ளது.

பொறியியல் சேரக்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அண்ணாமலை பல்கலை.யில் ஜூன் 27, 28-ல் தொடங்குகிறது பி.இ. கவுன்சிலிங்

பட்டியலை, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் செ.மணியன் வெளியிட, பதிவாளர் ஜெ.வசந்தகுமார் பெற்றுக்கொண்டார். அப்போது விரிவான கவுன்சிலிங் அட்டவணையையும் பல்கலைக்கழக நிர்வாகிகள் வெளியிட்டனர்.

இதுதொடர்பாக பல்கலை. துணைவேந்தர் செ.மணியன் கூறியதாவது: பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 27, 28-ஆம் தேதிகளில் காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு கவுன்சிலிங் அழைப்புக் கடிதம் விரைவு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக இணையதளத்திலும் அழைப்பு கடிதங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் முகவரியில் (www.annamalaiuniversity.ac.in) தெரிந்து கொள்ளலாம். மேலும் auregr000ymail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும், உதவி மைய தொலைபேசி எண்கள் 04144 238348, 238349 ஆகியவற்றிலும் மாணவர்கள் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டறியலாம்.

English summary
Chidambaram Annamalai University to conduct BE courses counselling from june 27 to june 28. University Vice-chancellor Manian has released the BE rank list yesterday.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia