2020-21 ஆம் கல்வியாண்டு முதல் பி.எச் படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் வழங்கப்படும் ஆராய்ச்சிப் படிப்பின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிஎச்.டி பாடிக்கும் மாணவா்கள் தங்களுடைய முதலாம் ஆண்டு ஆராய்ச்சிக்கான முன் அறிமுகப் பணிகளை முதுநிலை பட்ட மாணவர்களுடன் இணைந்து செய்யவேண்டும்.
பி.எச்டி படித்து வந்த மாணவர்கள் இதுவரையில் இரண்டு ஆண்டுகள் வரையில் விடுப்பு எடுக்க அனுமதிக்கப் பட்டு வந்தது. ஆனால், தற்போது ஓராண்டிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, கோா்ஸ் வொா்க் காலத்தின் போது ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை, பட்டியலிடப்பட்ட கட்டுரை வெளியீடு வலைதளத்தில் வெளியிட வேண்டும். தற்போது அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின் படி, பேராசிரியர் நிலையில் இருப்பவர்கள், பல்கலைக்கழகத்தால் பட்டியலிடப்பட்ட வெளியீடுகளில் குறைந்தபட்சம் 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவர்களுக்கு மட்டுமே ஆராய்ச்சி வழிகாட்டி அனுமதி வழங்கப்படும்.
மேலும், இணைப் பேராசிரியருக்கான பி.எச்டி படிப்பின் போது குறைந்தபட்சம் 3 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், உதவிப் பேராசிரியர் நிலையில் இருப்பவர்கள் குறைந்தபட்சம் 2 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டிருந்தால் மட்டுமே வழிகாட்டி அனுமதி அளிக்கப்படும் என அப்பல்கலைக் கழக பேராசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.