நடிகர் அஜித் குமார், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பதவி வகித்து வந்தார். இவர் தலைமையில் இயங்கிய தக்சா குழு பல்வேறு வெற்றிகளை குவித்திருந்தது.

இந்நிலையில், இத்திட்டத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் நம்ம தல-யிடம் திடீர் கோரிக்கையும் முன்வைத்துள்ளது உங்களுக்கு தெரியுமா?
Medical Express 2018 UAV Challenge
நடிகர் அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் கைதேர்ந்தவர். மேலும் டிரோனை இயக்குவதிலும் சமீபத்தில் கெத்து காட்டினார் நம்ம தல. அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் டிரோன் குறித்து ஆய்வு செய்ய தக்ஷா என்னும் குழுவை உருவாக்கினர். அந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக செயல்பட்டு பல சாதனைகளைத் தேடித்தந்தார்.
ஜெர்மனி
இதனிடையே தல அஜித் திடீரென ஜெர்மனிக்கு கிளம்பிச் சென்ற சம்பவம் அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியது. அதுவும், அண்ணா பல்கலைக் கழக மாணவர்களின் டிரோன் குறித்த ஆய்வுக்காக அவர் ஜெர்மனி சென்றிருந்தது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியடையச் செய்தது.
தக்ஷா
தக்ஷா குழுவின் அடுத்த திட்டத்திற்காக ஏரோமாடலிங் குறித்து ஆராய்ச்சி செய்யவே அஜித் ஜெர்மனி சென்றிருந்தார். அங்குள்ள வாரியோ ஹெலிகாப்டர் நிறுவன தலைவர் கிறிஸ்டன் ஜோட்னரை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் வைரலாகின.
கெத்து தல
தனக்கு பிடித்த விஷயத்தை செய்வதற்காக மெனக்கெடுபவர் தல அஜித் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அவரின் இந்த குணம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. நடிப்பை மட்டும் தொடராமல் புதுவிதமாக அடுத்தடுத்து சாதனை செய்து வரும் அஜித்தை யாருக்குத்தான் பிடிக்காது.
விமான வடிவமைப்பு
அவசரம் மற்றும் பேரிடர் காலத்தின்போது, மக்களுக்கு உதவும் வகையில், ஒருவர் பயணம் செய்யும் படியான நவீன விமானத்தை அண்ணா பல்கலைக்கழக குழு தயாரித்தது. இதில் ஆலோசகராக 10 மாதங்கள் பணி புரிந்த அஜித் குமார், விமான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் பல்வேறு ஆலோசனைகளை தக்சா குழுவுக்கு வழங்கி வந்தார்.
பணி நிறைவு பெற்ற தல
இந்நிலையில், அஜித்தின் பணி நிறைவு பெற்றுள்ளதாக அண்ணா பல்களைக்கழகம் அறிவித்துள்ளது. இதுவரை நடிகர் அஜித் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் எம்.ஐ,டி. கல்லூரிகள் தரப்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை வைத்த பல்கலைக் கழகம்
வருங்காலத்தில் நடிகர் அஜித்துக்கு விரும்பம் இருந்தால் அவர் தேவைக்கேற்ப ஆலோசகர் பணியில் மீண்டும் பணியாற்ற வேண்டும் என அண்ணா பல்கலைக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications












