வெள்ளத்தால் இழந்த கல்வி சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம் நடத்தும் அண்ணா பல்கலை.,

Posted By:

சென்னை: மழை, வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு முகாம்களை நடத்தவுள்ளது. இந்த முகாம்கள் டிசம்பர் 14-ம் தேதி முதல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகள், அரசு மானியம் பெறும் கல்லூரிகள், தன்னாட்சி, சுய நிதி பொறியியல் கல்லூரிகளும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விச் சான்றிதழ்களை மீண்டும் வழங்க டிசம்பர் 14 முதல் 2 வாரங்களுக்கு சிறப்பு முகாம்களை நடத்தவேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டத்தில் கல்லூரி முதவர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

வெள்ளத்தால் இழந்த கல்வி சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம் நடத்தும் அண்ணா பல்கலை.,

வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சான்றிதழ்களைத் திரும்பப் பெறலாம். இதற்கான மாதிரிப் படிவம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் கிடைக்கிறது.

எந்தவிதக் கட்டணமும் இன்றி சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia