என்ஜினீயரிங் படிப்புக்காக விண்ணப்பித்த மாணவர்களே.. இதுதான் உங்க ரேண்டம் நம்பர்....!!

Posted By:

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண்(ரேண்டம் எண்) நேற்று வெளியிடப்பட்டது. பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இந்த ரேண்டம் லிஸ்ட் வெளியாகியுள்ளதால் மாணவ, மாணவிகள் இந்த எண்களை இணையதளத்திலேயே பார்க்க முடியும்.

தமிழகத்தில் அரசு கல்லூரிகள் தவிர 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1.80 லட்சம் அரசு ஒதுக்கீட்டு பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

என்ஜினீயரிங் படிப்புக்காக விண்ணப்பித்த மாணவர்களே.. இதுதான் உங்க ரேண்டம் நம்பர்....!!

நடப்புக் கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் 1.90 லட்சம் அளவுக்கு விற்பனையாயின. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் மாணவர்கள் கடந்த ஆண்டை விட குறைந்த அளவே என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தனர்.

1 லட்சத்து 54 ஆயிரத்து 450 பேர் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து ரேண்டம் லிஸ்ட் தயார் செய்யப்பட்டது. அவர்களுக்கான பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. மாணவர்கள் இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களின் பார்வைக்காக பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

இந்தப் பட்டியலை www.annauniv.edu என்ற இணையதளத்திலும் பார்த்து அவர்கள் ரேண்டம் எண் என்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.

English summary
Anna University on Monday released random numbers for the single-window counselling for engineering admissions.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia