அண்ணா பல்கலை இணையதளத்தில் பொறியியல் படிப்பிற்கு 1 லட்சம் மாணவர்கள் பதிவு..!

Posted By:

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக 18 நாட்களில் 1.09 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது.

இணையதளம் மற்றும் தபால் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.

விண்ணப்பிப்பதற்கான பணத்தையும் இணையதள வங்கி சேவை/டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு மூலமாகவே செலுத்த முடியும் என்றும் மே 31ம் தேதி ஆன்லைன் பதிவு செய்ய கடைசி நாளாகும். என்றும் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புக்கான கட் ஆப் விவரம் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான கடந்த ஆண்டு ஒவ்வொரு கல்லூரிக்கான கட் ஆப் விவரம் www.annauniv.edu தளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவினரும் கட்ஆப் நிலை குறித்து அறிந்து கொள்ள அண்ணா பல்கலைகழகம் இந்த ஏற்பாடினை செய்துள்ளது.

 

 

பட்டமளிப்பு விழா

மேலும் துணைவேந்தர் இல்லாமல் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா ஆளுநர் வித்யாசாகர் முன்னிலையில் நடந்து முடிந்தது. அதற்கு ஒரு சில மாணவ மாணவியர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும். பட்டமளிப்பு விழா நடந்து முடிந்தது.

 

 

உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர்

துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற்க் குழு தீர்மானம் இயற்றி, இந்த பட்டமளிப்பு விழா நேற்று நடத்தப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழில் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கையெழுத்திட்டார்.

நீதி மன்ற உத்தரவு

பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஒப்புதலுடன் நேற்று நடந்து முடிந்தது. மேலும் உயர்நீதி மன்றம் துணைவேந்தர்தான் பட்டமளிப்பு சான்றிதழில் கையெழுத்திட வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. சட்டவிதிகளின்படி பட்டமளிப்பு விழாவை நடத்தும் முழு அதிகாரம் ஆட்சி மன்றக் குழுவிற்கு உள்ளது. எனவும் உத்தரவிட்டதால் நேற்று அண்ணாப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா இனிதே நடந்து முடிந்தது.

 

 

English summary
Anna University has registered 1 lakh students for engineering courses.Yesterday at Anna University, without Vice-Chancellor, the ceremony was held in the presence of Governor Vidyasagar,

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia