என்ஜீனியரிங் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்தது - 3 கல்லூரிகளில் ஆல் அவுட்!

Posted By:

சென்னை : தமிழகத்தில் என்ஜீனியரிங் மாணவர் சேர்க்கையை கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்த வருடம் என்ஜீனியரிங் சேர்க்கைக்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

மாணவ மாணவிகள் கல்லூரிகளை தேர்வு செய்ய கடந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம் என்ன என்பது அவர்களுக்கு தெரியாத நிலை இருந்தது. எனவே கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை வெளியிட அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு வெளியிட்டு இருந்தது.

அதன் படி அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை நேற்று வெளியிட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அரசு என்ஜீனியரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜீனியரிங் கல்லூரிகளில் 2016 ஏப்ரல், டிசம்பரில் செமஸ்டர் தேர்வுகளுக்கு எத்தனை மாணவர்கள் அனுப்பப்பட்டனர், அவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட விபரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணைதளத்தில் (www.coe.annauniv.edu) வெளியானது.

 என்ஜீனியரிங் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்தது -  3 கல்லூரிகளில் ஆல் அவுட்!

கடைசி 10 இடங்களை பிடித்த என்ஜீனியரிங் கல்லூரிகள் விபரம்

1. கணபதி செட்டியார் என்ஜீனியரிங் கல்லூரி மற்றும் டெக்னாலஜி - ராமநாதபுரம் (09.75 சதவீதம் தேர்ச்சி)

2. தமிழன் என்ஜீனியரிங் கல்லூரி மற்றும் டெக்னாலஜி - கன்னியாகுமரி (09.58 சதவீதம் தேர்ச்சி)

3. ஸ்ரீ ரமண மகரிஷி என்ஜீனியரிங் கல்லூரி - திருவண்ணாமலை (08.88 சதவீதம் தேர்ச்சி)

4. அர்ச்சனா இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி - கிருஷ்ணகிரி (07.58 சதவீதம் தேர்ச்சி)

5. உடையப்பா என்ஜீனியரிங் கல்லூரி மற்றும் டெக்னாலஜி - தேனி (07.46 சதவீதம் தேர்ச்சி)

6. கே.கே.சி என்ஜீனியரிங் கல்லூரி மற்றும் டெக்னாலஜி - அரியலூர் (05.83 சதவீதம் தேர்ச்சி)

7. லார்டு வெங்கடேஸ்வரா என்ஜீனியரிங் கல்லூரி - காஞ்சிபுரம் (05.59 சதவீதம் தேர்ச்சி)

8. ஏ.ஆர்.எஸ் என்ஜீனியரிங் கல்லூரி - காஞ்சிபுரம் (03.20 சதவீதம் தேர்ச்சி)

9. ஆக்ஸ்போர்டு என்ஜீனியரிங் கல்லூரி - திருவண்ணாமலை (03.14 சதவீதம் தேர்ச்சி)

10. ஜோ சுரேஷ் என்ஜீனியரிங் கல்லூரி - நெல்லை

11. லார்டு அய்யப்பா இன்ஸ்டிட்டியூட் ஆப் என்ஜீனியரிங் மற்றும் டெக்னாலஜி - காஞ்சிபுரம்

12. நைட்டிங்கேல் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி - கோவை

கடைசி 3 இடங்களில் உள்ள கல்லூரிகளில் யாருமே தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஏப்ரலில் 516 என்ஜீனியரிங் கல்லூரிகள் இருந்தன. ஆனால் அதே ஆண்டு டிசம்பரில் 506 கல்லூரிகள் மட்டுமே தேர்வை சந்தித்தன. இது குறிதுத அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் 10 கல்லூரிகளில் சில கல்லூரிகளி சுயாட்சி அந்தஸ்து பெற்றிருக்கலாம். சில கல்லூரிகள் மூடப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.

அண்ணா பல்கலைக்கழக ரேண்டம் எண் 20ந் தேதியும், ரேங்க் பட்டியல் 22ந் தேதியும் வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு 274ந் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போவதால் என்ஜீனியரிங் கலந்தாய்வும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

தேர்ச்சி வீதம் வெளியிட்டதின் காரணமாக மாணவ மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்று என்ஜீனியரிங் கல்லூரிகளை தேர்ந்து எடுக்க வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Anna University has been conducting annual counselling for engineering admission in Tamil Nadu. 1 lakh 40 thousand 451 people have applied for this year.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia