துணைவேந்தர் இல்லாத அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு தடை இல்லை... உயர்நீதி மன்றம் உத்தரவு..!

Posted By:

சென்னை : சென்னை ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாளை பட்டமளிப்பு விழா நடப்பதற்கு தடை இல்லை என உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.

துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடைபெறுவதை தடைசெய்யக் கோரிய மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 37 வதுபட்டமளிப்பு விழா 19ந் தேதி நாளை நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி தற்போது காலியாக உள்ளது.

துணைவேந்தர் இல்லாத பட்டமளிப்பு விழா

துணை வேந்தர் இல்லாத காரணத்தினால் பட்டமளிப்பு சான்றிதழில் தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கையெழுத்து போட்டு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவை துணை வேந்தர் இல்லாமல் நடத்த முடியாது. பட்டமளிப்பு சான்றிதழில் துணை வேந்தர் மட்டுமே கையெழுத்திட தகுதியானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

வேறு யாராவது கையெழுத்திட்டால் அந்த சான்றிதழ் செல்லாது. எனவே இந்த பட்டமளிப்பு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணிம் முன்பு கடந்த 10ந் தேதி விசாரணைக்கு வந்த போது இந்த மனுவுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம். கோவிந்தராஜ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

சிண்டிகேட் கூட்டம்

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி துணை வேந்தர் இல்லாத பட்சத்தில் சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் பட்டமளிப்பு விழாவை நடத்தலாம். அந்த சான்திழில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கையெழுத்திடலாம் என்று வாதிட்டார்.

உயர்நீத மன்ற உத்தரவு

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 1ந் தேதி துணை வேந்தர் அல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டது. அவ்வாறு பட்டமளிப்பு விழா நடத்தினால் அது செல்லாது என்பதால் அதை ரத்து செய்து கடந்த நவம்பர் 30ந் தேதி அப்பல்கலைக்கழகத்தின் சிண்டி கேட் முடிவு செய்து உத்தரவிட்டது. துணை வேந்தர் கையெழுத்தில்லாமல் வழங்கப்படும பட்டமளிப்பு சான்றிதழ் எங்கேயும் ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே மாணவர்கள் நலன் கருதி நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதி எம். கோவிந்தராஜ் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு தடை இல்லை என உத்தரவிட்டுள்ளார்.

English summary
The High court orders not to ban Anna University graduation ceremony tomorrow without vice chancellor.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia