தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு... அண்ணா பல்கலை அறிவிப்பு

Posted By:

சென்னை: அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் ஜூன் 22 வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர கலந்தாய்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தில் 1,40,000 பேர் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு... அண்ணா பல்கலை அறிவிப்பு

பி.இ. மற்றும் பி.டெக் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் இன்று ஜூன் 20ந் தேதி அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உயர் கல்வி முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் அண்ணா பல்கலை இணையதளத்தில் பொறியில் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்ணை இன்று வெளியிட்டார். http://random.annauniversitycounselling.com/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பித்த மாணவ மாணவியர்கள் தங்கள் ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22 வெளியிடப்படும்.

மேலும் ஜூன் 27ம் தேதி கலந்தாய்வு தொடங்கப்படும் எனவும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

English summary
Above article mentioned about Anna university Engineering Admission Random number Released today.
Please Wait while comments are loading...