அண்ணா பல்கலைக்கழகத்தில் நச்சுன்னு 4 வேலை காலியா இருக்கு.. நீங்க ரெடியா?

Posted By:

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் சிறந்த பல்கலைக் கழகமாகத் திகழ்கிறது. அதில் புராஜெக்ட் அசோஸியேட் 1, புராஜெக்ட் அசோஸியேட் 2
, புராஜெக்ட் சயின்டிஸ்ட், பியூன் கம் டிரைவர், புராஜெக்ட் பெல்லோ ஆகிய தற்காலிகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நச்சுன்னு 4 வேலை காலியா இருக்கு.. நீங்க ரெடியா?

கல்வித்தகுதி -

புராஜெக்ட் அசோஸியேட் 1 -
பிஇ சிவில் எஞ்ஜீனியர் / புவியியல் தகவல் நுட்பம் / எம்எஸ்சி புவியமைப்பியல் / புவியியல் / தொலை உணர்வு (பிளஸ் 2 பிறகு தொழில்முறை கல்வி 4 ஆண்டுகள்) ஒரு வருட பணி அனுபவம் ஆர்எஸ் & ஜிஐஎஸ் வேலை மற்றும் ஜிஐஎஸ், ஆர்எஸ் பகுப்பாய்வு மற்றும் மேப்பிங் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

புராஜெக்ட் அசோஸியேட் 2 -
எம்டெக் தொலை உணர்வு / எம்இ ஜியோமெட்டிக்ஸ் (பிளஸ் 2 பிறகு தொழில்முறை கல்வி 6 ஆண்டுகள்) லென்டூஸ் / லென்டுகவர் வேலையில் மூன்று ஆண்டுகள் அனுபவம் மற்றும் ஜிஐஎஸ், ஆர்எஸ் பகுப்பாய்வு மற்றும் மேப்பிங் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

புராஜெக்ட் சயின்டிஸ்ட் -
பிஎச்.டி / தொழிற்சாலையில் ஆர் & டி அனுபவம் (குறைந்தபட்ச 4 ஆண்டுகள் முதுகலைப் படிப்பிற்கு பிறகு)
மற்றும் ஆர்எஸ் & ஜிஐஎஸ் மற்றும் தொழில்நுட்பத்தில் மேற்பார்வை பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பியூன் கம் டிரைவர் -
8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிரைவிங் லைசன்ஸ்

புராஜெக்ட் பெல்லோ -
பிஇ (சிவில் / ஜியோ / விவசாயம்) / எம்சிஏ படிப்பு மற்றும் டேட்டா கலெக்சன், ஜிஐஎஸ் வேலை அறிவு, நீண்ட நாள் அனுவபம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு -
அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிகப் பணியிடங்கள் குறித்த ஆன்லைன் அறிவிப்பினைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை - நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஊதியத்தொகை -

புராஜெக்ட் அசோஸியேட் 1 - ரூ. 15000 முதல் 30000 வரை

புராஜெக்ட் அசோஸியேட் 2 - ரூ. 20000 முதல் 30000 வரை

புராஜெக்ட் சயின்டிஸ்ட் - ரூ. 20000 முதல் 30000 வரை

பியூன் கம் டிரைவர் - ரூ. 337/- (தினமும்)

புராஜெக்ட் பெல்லோ - ரூ. 10000/-

விண்ணப்பிக்கும் முறை - www.annauniv.edu என்ற இணையதளத்திற்குச் சென்று அப்ளிகேஷன் டவுன் லோடு செய்து அதனை பூர்த்தி செய்து, அத்துடன் ஐடி, மற்றும் அட்ரஸ் புரூப், பள்ளிக் கல்லூரிச் சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ், விண்ணப்பக்கட்டணம் செலுத்திய ரசீது அனைத்தினையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 27.03.2017ம் தேதிக்குள் அனுப்பவும்.

இயக்குனர்,
ரிமோட் சென்சிங் நிறுவனம்,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை -600 025

English summary
Anna University Chennai Released Job Openings Notification 2017 Eligible Candidates can Download Application Through Official website www.annauniv.edu

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia