சென்னை: சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி, எம்.பில் படிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2 ஆண்டு எம்.எஸ்சி படிப்புகள், 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்புகள் (கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக் மீடியா), ஓராண்டு எம்.பில் படிப்புகளை இங்கு படிக்க முடியும்.

எம்.எஸ்சி படிக்க விரும்பும் மாணவர்கள் பி.எஸ்சி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எம்.பில் படிக்க விரும்பும் மாணவர்கள் பட்டமேற்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்வேண்டும்.
5 ஆண்டு எம்.எஸ்சி எலக்ட்ரானிக் மீடியா படிக்க விரும்புபவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
இந்தப் படிப்புகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்ப இங்கு கிளிக் செய்யவும். https://www.aukdc.edu.in/adms/index.html
பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இங்கு சேர்க்கை வழங்கப்படும். இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 8 கடைசி தேதியாகும்.


Click it and Unblock the Notifications












