UPSC 2019: யுபிஎஸ்சி தேர்வில் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த அண்ணாவின் பேத்தி!!

யுபிஎஸ்சி இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், இன்றளவில் நாட்டு மக்கள் போற்றக்கூடிய தலைவருமான அண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய 2019-ம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது.

UPSC 2019: யுபிஎஸ்சி தேர்வில் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த அண்ணாவின் பேத்தி!!

இதில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், இன்றளவில் நாட்டு மக்கள் போற்றக்கூடிய தலைவருமான அண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றுள்ளார்.

யுபிஎஸ்சி 2019

யுபிஎஸ்சி 2019

யுபிஎஸ்சி என்னும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு இத்தேர்வு நடைபெற்றது. இதனிடையே, கொரோனா ஊரடங்கின் காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 4ம் தேதியன்று இத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

எத்தனை பேர் தேர்ச்சி?

எத்தனை பேர் தேர்ச்சி?

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பிரிவுகளில் 927 பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்றதில், 829 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், இட ஒதுக்கீட்டின் படி பொதுப் பிரிவினர் 304, ஓபிசி 251, பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் 78, எஸ்சி 129, எஸ்டி 67 பேர் என மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அண்ணாவின் பேத்தி
 

அண்ணாவின் பேத்தி

இந்தியா முழுக்க நடந்த இந்த ஆட்சி பணிகளுக்கான தேர்வில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் கொள்ளு பேத்தி பிரித்திகா ராணி வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் பலர் இந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் 23 வயதான பிரித்திகா ராணி தேர்ச்சி பெற்றுள்ளது சாதனையாகக் கருதப்படுகிறது.

முதல் முயற்சியிலேயே மகுடம் சூடிய ராணி

முதல் முயற்சியிலேயே மகுடம் சூடிய ராணி

குறிப்பாக, பிரித்திகா ராணி தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வென்றி கண்டுள்ளார். அதிம் 171 இடத்தை இவர் பிடித்துள்ளார். ஐஏஎஸ் ஆகும் கனவுடன் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு இந்த சாதனையைப் படைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna's great granddaughter ranks 171 in UPSC
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X