அண்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா.. விரைவில்!

Posted By:

சென்னை : கடந்த வருடம் அண்ணா பொறியியல் கல்லூரியில் பட்டப் படிப்பினை முடித்த மாணவ மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா விரைவில் நடத்தப்படும் என பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பொறியியல் கல்லூரியில் கடந்த வருடம் (2016) பட்டப்படிப்பை முடித்த மாணவ மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. இதனால் மாணவ மாணவியர்கள் மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பில் சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அண்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா.. விரைவில்!

மாணவ மாணவியர்கள் மேல்படிப்பில் சேருவதற்கு ஒரிஜினல் சான்றிதழ் தேவைப்படுவதாலும் மற்றும் வேலையில் சேருபவர்களுக்கும் சான்றிதழ் தேவைப்படுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். கடந்த வருடம் மே மாதம் துணைவேந்தர் பணிக்காலம் முடிந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.

2016ம் ஆண்டு மே மாதம் துணைவேந்தர் பணிநிறைவு பெற்று சென்றுவிட்டார். அதன் பிறகு புதிய துணை வேந்தர் நியமிக்கப்படாத காரணத்தினால் பட்டமளிப்பு விழாவில் தாமதம் ஏற்பட்டு விட்டது.

ஆனால் கடந்த வருடம் பொறியியல் படிப்பை முடித்த மாணவ மாணவியர்களுக்கு விரைவில் பட்டமளிப்பு விழா (கான்வகேஷன்) நடத்தப்படும் என பதிவாளர் கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் பொறியியல் படிப்பில் இந்த வருடம் சேருவதற்கான விண்ணப்பம் விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளளார்.

தேசிய தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தை பிடித்த பல்கலைக்கழகங்களில் அண்ணாப்பல்கலைக்கழகம் 6வது இடத்தையும், பொறியியல் கல்லூரிகளில் 8வது இடத்தையும் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பதிவாளர் கணேசன் கூறியுள்ளார்.

English summary
The registarar has announced that Anna engineering college graduation ceremony as soon as. Last year, Students will get convaction certificate in the graduation ceremony program.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia