அற்புத நினைவாற்றல்... 5 வயது அதிசயம்!!

Posted By:

சென்னை: 5 வயதில் கூகுள் பாய் விருது பெற்று அசத்தியுள்ளார் மீரட் நகரைச் சேர்ந்த சிறுவன் அன்மோல் ஸ்வாமி.

அறிவுப்பெட்டகம்

3 வயது வரை பேசாமலிருந்த அன்மோல் அதன் பிறகு பேசத் தொடங்கி அதிசயத்தக்க வகையில் பல தகவல்களைச் சொல்கிறான். பொது அறிவுப் பெட்டகமாக விளங்குகிறான் இந்தச் சிருவன். பல்வேறு தகவல்களை தனது நினைவுப் பெட்டகத்தில் வைத்திருக்கும் அதிசயச் சிறுவனாக விளங்குகிறான் இந்தச் சிறுவன்.

நாடுகளின் தலைநகரங்கள்

உலகத்திலுள்ள பெரும்பாலான நாடுகளின் பெயர்கள், அதன் தலைநகரங்கள், நாடுகளின் பிரதமர், அதிபரின் பெயர்களைச் சரியாகச் சொல்கிறான் இந்தச் சிறுவன்.

பிரதமர் பெயர்கள்

இந்தியப் பிரதமர்களில் ஜவாஹர்லால் நேரு பெயர் முதல் இப்போது நரேந்திர மோடியின் பெயரை வரை சரியாகச் சொல்கிறான் இந்தச் சிறுவன்.

பேசாத சிறுவன்

மீரட் நகரைச் சேர்ந்த அன்மோல், பிறந்தது முதல் பேசவேயில்லை. இதைத் தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகளை சிறுவனுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவன் பேசவில்லை. 3 வயது வரை பேசாமல் இருந்த சிறுவன் பிறகு அவனை பள்ளியில் சேர்த்தனர் அவனது பெற்றோர்.

பேசியே அசத்துகிறான்

பள்ளிக்குச் சென்ற பிறகு அவனுக்கு சிறிது சிறிதாக பேச்சு வந்தது. இப்போது மிகவும் நன்றாகப் பேசத் தொடங்கி அதிசயத்தக்க வகையில் அவனது நினைவாற்றல் உள்ளது. இப்போது பேசிப் பேசியே அனைவரையும் அசத்தி வருகிறான்.

முதல்வர் பாராட்டு

அவனது திறமையை உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிடம் எடுத்துக் கூறியுள்ளார், உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாய். இதைத் தொடர்ந்து சிறுவனை அழைத்துப் பாராட்டியுள்ளார் அகிலேஷ்.

விருது

இந்தத் தகவலை அறிந்த கூகுள் நிறுவனம், சிறுவனுக்கு மீரட்டின் கூகுள் பாய் விருதை வழங்கியுள்ளது.

English summary
Anmol Swami from Meerut who lives in Gandhinagay colony, received the title 'Meerut's Google Boy' last year in 2014 by a city-based school at the age of 3. Anmol, who could hardly speak when he turned 3 years old is now a child prodigy. Now, his brain has treasure of G.K, which most of the grownups also do not remember. According to the reports, he remembered the name of the capitals of almost all the countries in the world, ask him the name of the name of India's prime minister, he lists the name of every prime minister, starting right from Jawaharlal Nehru to the present PM Narendra Modi.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia