அறிவோம் பாரம்பரியமிக்க இந்திய ஆசிரியர்களும் அவர்களது ஆக்கமும் !!

Posted By:

ஆசிரியர்கள் ஒரு நாட்டின் கட்டமைப்பை திறம்பட கட்டமைக்கும் திறன் படைத்தவர்கள் ஆவார்கள் . ஆசிரியர்கள் நாட்டை வளப்படுத்தும்  திறன் படைத்தவர்கள் ஆவார்கள் .

ஆசிரியர்கள் ஒரு நாட்டின் முக்கிய வளமாக கருதப்படுவார்கள் . முறையாக கற்ப்பிக்கும் ஆசிரியர்களால்தான தேசம் தலைக்கும் . ஆசிரியர்கள் தேசத்தின்
ஊன்றுகோலாக இருந்து திறம்பட மாணவர்களை உருவாக்கி தருவதில் பெரும் பங்காற்றுகின்றனர். நாம் இந்தியாவில் கடந்து வந்த ஆசிரியர்கள் பற்றி அறிந்துகொள்வோம்.

ஆசிரியர்கள் :

மாதா, பிதா, குரு என்று மனித வாழ்வின் மூம்மூர்த்திகளுள் ஒருவராக ஆசிரியர்கள் மதிக்கப்படுவது தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள ஒன்றாகும். இந்தியா போன்ற பாரம்பரிய மிக்க நாட்டில் ஆசிரியர்களை சிறப்பித்தல் என்பது மாணவர்கள் , மக்களுக்கு வாழ்வின் முக்கிய அங்கம் ஆகும் . ஆசிரியர்கள்தான் நாட்டின் மன்னவனையும் , தென்னவனையும் உருவாக்குகிறார்கள் . நாடு வளம் பெற எவ்வாறு விவசாயம் அவசியமோ அதுபோன்று நாட்டின் மக்கள் அறிவு , அன்பு, ஒழுங்கு , தயை போன்ற மனிதகுனத்துடன் மிளிர உதவுவது ஆசிரியர் ஆவார் .

பரசுராமர் , துரோணர்:

ஆசிரியர்கள் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர்கள் சிறிய வயது முதல் நாம் அறிந்தவர்களுள் முக்கிய நபர்களில் கீதை தந்த கண்ணன், அபிமன்யுவின் ஆசான் கார்குழல் வண்ணன், துரோணர் , பரசுராமர் நினைவுக்கு வருகிறார்களா, சமிபத்தில் நாம் பார்த்து வெற்றி கரமாக ஒடிய மகாபாரத்தை மெல்ல அசைபோட்டு ரீவைண்ட் செய்து பாருங்கள் கர்ணன், துரோணர், பீஷ்மர், துரோணர்கள் அனைவருக்கும் ஆசானாக இருந்து ஆயகலைகள் அனைத்தையும் திறம்பட கற்றுகொள்ள வழிகாட்டியாக இருந்தவர் பரசுராமர் ஆவார்.
பீஷ்மர் மீது குற்றம் சாட்டப்பட்ட போது அது உண்மையெனில் தன் பிரிய மாணவருக்கும் தண்டனை வழங்க தயங்காதவர் பரசுராமர் ஆவார் .

இந்திய ஆசிரியர்கள் உருவாக்கிய காலத்தால் அழியாத சுவடுகள்

துரோணர் தர்மத்தின் ஐந்து ஆதாரங்களான பஞ்சபாண்டவர்களுக்கும் , வில்வித்தையில் சிறந்த ஏகலைவனையும் உருவாக்கியவர் துரோணர் ஆவார்.

சாணக்கியர் :

இந்திய வரலாற்றின் மிகசிறந்த முக்கிய மேதை பொருளாதார நிபுணர் அரசு ஆலோசகர் , சிறந்த ஆசிரியர் , தக்சசீல பல்கலைகழகத்தில் பேராசியராக பணியாற்றிவர் ஆவார் . அத்துடன் மிகசிறந்த அரசியல் படைப்பான அர்த்த சாஸ்திரம் அவரால் படைக்கப்பட்டது . சாதாரண குடுமபத்தில் பிறந்த சந்திர குப்தரை அரசராக்கி மௌரிய சாமராஜ்ஜியம் படைக்க உறுதியாயிருந்தவர் சாணக்கியர் . நீதிபதி மற்றும் அரசு ஆலோசகராய் இருந்தார் . ஆசானுக்குரிய சிறப்பு தகுதி படைத்தவர் கௌடில்யர் எனபதை சந்திர குபதர் அறிவுறையிலே அறியலாம்.

இந்திய ஆசிரியர்கள் உருவாக்கிய காலத்தால் அழியாத சுவடுகள்

சாணக்கியர் பொண் மொழிகள்:

"மிகவும் நேர்மையாக இருக்காதே நேராக வளர்ந்த நெடிய மரங்கள்தான முதலில் வெட்டுக்கு இரையாகும்"

பிரச்சனை இல்லாத வாழ்கையில் வளர்ச்சி இல்லை என்பான புத்திசாலி ,,,,,

எங்கே ஆட்சியாளன் குடிமகனை போல் சாதரணமாக வாழ்கிறானோ, அங்கே அவன் குடிகள் அரசணை போல் வாழ்வான், எங்கே ஆட்சியாளன் அரசனை போல் வாழ்கிறானோ அங்கே அவன் குடிகள் பிச்சைக்காரர்களை போல் வாழ்வார்கள்

இவ்வாறு பல்வேறு சிறப்புத்தன்மை கொண்டது ஆசிரியர்கள் பணி அவர்களுக்கான சிறப்புத்தன்மை என்றும் நிலைத்திருக்கும் 

சார்ந்த பதிவுகள்: 

ஆசிரியர்தினத்திற்கான ஆசிரியர், மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரை போட்டி !! 

தேசிய குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு

English summary
here article tell about ancient teachers and their achievements for teachers day special

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia