கோவை அம்ரிதா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி, எம்.எஸ்சி படிக்க ஆசையா...!!

Posted By:

கோவை: கோவையிலுள்ள அம்ரிதா விஸ்வா வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி, எம்.எஸ்சி படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2016-17-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும். பிஎஸ்சி பயோடெக்னாலஜி, மைக்ரோபயலாஜி படிப்புகள், எம்.எஸ்சி பயோடெக்னாலஜி, பயோஇன்பர்மேட்டிட்க்ஸ் போன்ற படிப்புகளை இங்கு படிக்கலாம்.

கோவை அம்ரிதா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி, எம்.எஸ்சி படிக்க ஆசையா...!!

பி.எஸ்சி படிப்புகள் படிக்க பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் பிளஸ்2-வில் வேதியல், உயிரியல், பயோடெக்னாலஜி படிப்பு படித்திருக்கவேண்டும்.

எம்.எஸ்சி படிப்புகள் படிக்க பி.எஸ்சியில் சம்பந்தப்பட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

இந்தப் படிப்புகள் படிக்க ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் மாணவர்கள் இந்தப் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்கள் மே 30-ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலனை, நேர்முகத் தேர்வு ஜூன் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறும்.

விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 15 கடைசி நாளாகும். கவுன்சிலிங் ஜூன் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு http://www.amrita.edu என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications have been invited by Amrita Vishwa Vidyapeetham University, Coimbatore for admission to undergraduate and postgraduate course for the academic session 2016-17. Admission are offered in the following programmes: Bachelor of Science (B.Sc) in Biotechnology and Microbiology Master of Science (M.Sc) in Biotechnology, Microbiology and Bioinformatics How to Apply ? Candidates should visit the official website to apply online For more details on how to Apply? visit the official website

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia