தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் மாற்றுச் சான்றிதழ்... நோ ரெக்கார்டு ஷீட்..!

Posted By:

சென்னை : தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் வேறு பள்ளிக்கு மாறிச் செல்லும் போது மாற்று சான்றிதழ் (டி.சி) வழங்கப்படும். ஆனால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பதிவுத்தாள் (ரெக்கார்டு ஷீட்) வழங்கப்பட்டு வந்தது.

தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் மாற்றுச் சான்றிதழ்... நோ ரெக்கார்டு ஷீட்..!

எனவே தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும என மாணவ மாணவிகளின் பெற்றோர் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச் சந்திரனுக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி இயக்குனர் கார்மேகம் அனுப்பினார்.

இதை ஏற்று தற்போது அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இருந்து மாறிச் செல்லும் மாணவ மாணவிகளுக்கும் இனி மாற்றுச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

English summary
Steps have been taken to provide alternate certificates to the students of primary school and middle school.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia