அனைத்து கல்லுரிகளும் யுஜிசியின் அறிவிப்புபடி நாக் தர மதிப்பீடு பெற்றிருக்க வேண்டும்

Posted By:

தமிழகத்தில் சென்னையிலுள்ள அனைத்து கல்லுரிகளும் நாக் மதிப்பீட்டின் கீழ் இருக்க வேண்டும் . நாக் தர மதிப்பீடு பெற்றிருக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது .

யுஜிசியின் அறிவிப்பு படி அனைத்து கல்லுரிகளும் தர மதிப்பீடு பெறல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

கல்லுரியின் தரம் , அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களின் திறன் வளர்ப்பு தொடர்பான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும் . 1947 களில் 20 பல்கலைகழகமும் 400 கல்லுரிகள் இருந்தன ஆனால் இன்று 800 பல்கலைகழகங்களும் 40,000 கல்லுரிகளும் நாடு முழுவது பரந்து விரிந்து காணப்படுகிறது .

நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்த உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் அரசு உயர்த்த வேண்டியுள்ளது . மேலும் நாட்டிலுள்ள கல்லுரிகளின் தரம் நாக் மதிப்பீட்டின் கீழ் வரும்போது எளிதாக தரம் பிரித்து அறிவிக்கப்படும். மாணவர்களும் நல்ல தரமான கல்லுரியில் இணைய இயலும் ஆகவே இது குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளவும் , இத்தகவல்கள் வெளியிடும் போது கல்லுரிகள் போட்டியிட்டு உள் கட்டமைப்பு வசதிகள் பெருக்கவும் நாக் குழுவின் மதிப்பீடு உதவியாக இருக்கும் எனவே நாக் கமிட்டியின் கீழ் தரமதிப்பீடு அனைத்து கல்லுரிகளும் பெற வேண்டியதன் அவசியம் ஆகின்றது .

ஒவ்வொரு கல்லுரியும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டி ஆராய்ச்சி மற்றும் செயல்முறை தேர்வுகளுக்கு முக்கியமளிக்க வேண்டும் . இதன் மூலம் கல்லுரிகளிலிருந்து வெளியேறும் மாணவர்களின் தரம் மற்றும் அவர்களின் அணுகுமுறை மேம்பட்டு இருக்கும்.

ஆகவே கல்லுரிகளின் தரத்தையும் மாணவர்களின் தரத்தையும் மேம்படுத்தவே இது உதவிகரமாக இருக்கும் என அனைத்து கல்வியியல் வல்லுநர்களாலும் நம்பபடுகிறது . எது எப்படியோ கல்லுரியின் பாடத்திட்டங்களில் மாற்றமும் கல்லுரிகளின் பாடம் எடுக்கும் போக்கும் மாற்றம் அடைய வேண்டும் . சலிப்புத் தன்மையற்ற புதுமையான செயல்முறை கல்விக்கு கல்லுரிகள் மாறும் போது மாணவர்களின் சிந்தனையும் அவர்களின் விருப்பங்களும் மாறுபடும் .

சார்ந்த பதிவுகள்:

நெட் தேர்வு எழுதுவோர்கள் ஆதார் எண்ணை கட்டாயமாக அறிவிக்க வேண்டும் 

யுஜிசியின் 2017ஆம் ஆண்டிற்க்கான வழிகாட்டியை வெளியிட்டுள்ளது

மாணவர்களே.... உஷார்....! போலி பல்கலை.களின் பட்டியல் தயார்..!!

மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி தொகை 

English summary
here article mentioned about UGC announcement for tamilnadu college

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia