ஆறாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு

நாட்டில் அமலில் உள்ள அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி (ஆர்டிஇ) 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவச் செல்வங்களுக்கு கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று அரசு, அரசு மானியம், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் அல்லது கல்வி சட்டம் (RTE) 4 ஆகஸ்ட் 2009 இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த கல்வி உரிமை சட்டம் இந்தியாவில் 6 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி முக்கியத்துவத்தை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 21A கீழ் விவரிக்கிறது.

இந்த சட்டமானது, 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்த து. அப்போது, இந்திய நாடானது, ஒவ்வொரு குழந்தைக்கும் கலவி ஒரு அடிப்படை உரிமை என்று வகை செய்யும் 135 நாடுகளில் ஒன்றாக மாறியது. இந்த கல்வி உரிமைச் சட்டத்தால் நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி உள்ளதாவது:
நாட்டில் தற்போது ஆர்டிஇ கல்விச் சட்டம் அமலில் உள்ளது. அதன்படி செயல்பட வேண்டிய பொறுப்பு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு

நடப்பு கல்வி ஆண்டில் (2023-2024) 6,7,8 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பாக பின்வரும் நெறிமுறைகளை பின்பற்றுமாறு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் சிறப்பு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

6 மற்றும் 7-ம் வகுப்புகளுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் 3-ம் பருவத்தேர்வுக்குரிய மதிப்பெண்கள் மற்றும் கிரேடுகளை ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் பதிவு செய்வது அவசியமாகும். மேலும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவுசெய்வதும் அவசியமான செயலாக உள்ளது. 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவுசெய்ய வேண்டும். மேலும் பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும் என்ற உத்தரவை நான் பிறப்பிக்கிறேன்.

மாணவ, மாணவிகளின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமலும் 9-ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் முடிவுசெய்யப்பட்டு தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமாகும்.

அனைத்து பள்ளிகளும் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7 மற்றும் 8-ம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.

இதை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டியது அவசியம்.
இவ்வாறு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
All students from 6th to 8th standard should get promotion through RTE act, Chennai Chief Education officer (CEO) Mars says through a circular.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+