என்ஜினியர் படிப்பை பாதியில் நிறுத்தினால் முழு கல்விக்கட்டணம் திருப்பி தரவேண்டும் -அகில இந்திய தொழில்

Posted By:

சென்னை : பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துப் படிக்கும் போது பாதியிலே படிப்பை விட்டுச் செல்லும் மாணவர்களுக்கு அவர்கள் கல்லூரியில் பயின்ற நாட்களுக்குரிய கட்டணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள தொகையை மாணவர்களிடமே கொடுத்துவிட வேண்டும் என அகிலஇந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்காக கட்டணத்தை செலுத்திவிட்டு படிக்க முடியாமல் பாதியில் கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவ மாணவியர்களுக்கு அவர்கள் கல்லூரியில் பயின்ற நாளுக்குரிய கட்டணத்தை மட்டும் கல்வி நிர்வாகம் எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள பணத்தை மாணவ மாணவியர்களிடமே கொடுத்து விட வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அதிரடியாக அறிவித்துள்ளது.

என்ஜினியர் படிப்பை பாதியில் நிறுத்தினால் முழு கல்விக்கட்டணம் திருப்பி தரவேண்டும் -அகில இந்திய தொழில்

பொறியியல் கல்லூரியில் சேருவதற்காக கல்விக் கட்டணத்தை செலுத்தி விட்டு சில மாணவர்கள் வகுப்புக்கள் ஆரம்பமாகுவதற்கு முன்பே கல்லூரியை விட்டு வெளியே சென்று விடுகின்றனர். பலர் சில மாதங்களில் குடும்ப சூழ்நிலையாலும் படிக்க முடியாமல் வெளியேறுவார்கள்.

அப்படி வெளியே செல்லும் மாணவர்களுக்கு அவர்கள் கல்விக்கட்டணம் அனைத்தையும் திரும்ப கொடுத்துவிட வேண்டும். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை மட்டும் கல்லூரி நிர்வாகம் எடுத்துக் கொள்ளலாம் என அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அறிவித்துள்ளது.

மேலும் கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு 7 நாட்களுக்குள் அவர்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தை திரும்ப செலுத்தி விட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறி கல்லூரி நிர்வாகம் செயல்பட்டால் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால் பொறியியல் படிக்கும் மாணவ மாணவியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
All India Technology Council has announced that Education fees have to be paid back for engineering students. All Engineering students are very happy.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia