சென்னை: இந்திய விமானநிலைய ஆணையத்தில்(ஏஏஐ) ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும், திறமையும் வாய்ந்த நபர்கள் ஜனவரி 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மொத்தம் 200 பணியிடங்கள் காலியாகவுள்ளன.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் அந்தஸ்தில் பல பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளன. இந்த வேலையில் சேர பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்கவேண்டும். பி.எஸ்சி பட்டப்படிப்பில் கணிதமும், இயற்பியல் பாடமும் இருந்திருக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணமாக ரூ.1,000 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு இந்தக் கட்டணம் கிடையாது.
ஆன்-லைனஅ தேர்வு, குரல் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் ஜனவரி 30-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
தேர்வு குறித்து இணையதளத்தில் தொடர்புகொண்டு நுழைவுச் சீட்டைப் பெறலாம்.
தேர்வு முடிவுகளும் இணையதளத்திலேயே வெளியிடப்படும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை http://www.aai.aero/public_notices/aaisite_test/main_new.jsp என்ற இணையதளத்தில் பெறலாம்.


Click it and Unblock the Notifications












